மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்று முழுவதும் உலகில் என்ன நடந்தது..? டக்கென்று அறிய.. இதோ காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- மனுக்களை காகிதமாக பார்க்க வேண்டாம்; மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - சேலம் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு
- அதிமுகவில் எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ரூ.1 கோடி பேரம் - ஓபிஎஸ் ஆதரவாளர் ஆடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு
- திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளை; வெளிமாநிலம் தப்பிய கொள்ளையரை தனிப்படை சுற்றி வளைத்தது - வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தகவல்
- சேலம் மாநகர தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஆய்வு
- தமிழ்நாட்டில் 20ம் தேதி வரை பனிமூட்டம் நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
- கிருத்திகா மேஜர் என்பதால் யாருடன் செல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்ற இந்திய ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
- முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கண்டித்து, மூடர்கூடம் திரைப்பட இயக்குநர் நவீன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
- விழுப்புரம் : ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.18.80 லட்சத்தை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தொடர்பாக யூகத்தின் தரப்பில் வழக்கு தொடர்வதா என, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா:
- நடந்து முடிந்த திரிபுராவில் 86 சதவீத வாக்குப்பதிவு; நீண்டநேரம் வரிசையில் நின்று வாக்களித்த பொதுமக்கள்
- சிவிங்கிப் புலி’ திட்டத்தின் கீழ் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் நாளை (18.பிப்ரவரி.2023) இந்தியாவிற்கு அழைத்துவரப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
- உலகின் மெதுவான நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
- உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிட கட்டணமின்றி அனுமதி வழங்கப்படும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
- ஜம்மு காஷ்மீர் குல்மார்க் நகரில் பனிச்சறுக்கு விளையாட்டில் ராகுல் காந்தி ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகை ஸ்வரா பாஸ்கர் அரசியல் கட்சி தலைவரான ஃபஹத் ஜிரார் அகமத் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.
உலகம்:
- பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.272க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு.
- துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 42,000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பொருளாதார நெருக்கடியால் செலவினங்களை குறைக்கும் நோக்கில், ஆயிரகணக்கானோரை வேலையை விட்டு நீக்கிய மெட்டா நிறுவனம், அதன் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க்ஸின் பாதுகாப்பிற்காக பல கோடிகளை ஒதுக்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- ஆஸ்திரேலியாவில் டாக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் உள்ள கிராம கவுன்சில் ஒன்று நாட்டின் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் டாக்டர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது
விளையாட்டு:
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தனது ஆதிக்கத்தை நீட்டிக்கும் முனைப்புடன் இந்திய அணி இன்று 2-வது டெஸ்டில் களம் இறங்குகிறது.
- சேத்தன் சர்மா பேசியுள்ளவை அனைத்தும் உண்மையானவை அல்ல என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
- ஐசிசி டெஸ்ட் அணி தரவரிசையில் இந்தியா நம்பர் 1 அணியாக தேர்வு செய்ததற்கு தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
- இந்திய அணி வீரர்களுக்கு டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டல்களில் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.
- பிரித்வி ஷா மும்பையில் உள்ள சாலையில் ஒரு குறிப்பிட்ட கும்பலால் தாக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உனத்கட் தனது 3வது விக்கெட்டான முகேஷ் குமாரை வீழ்த்தியதன் மூலம் ரஞ்சி டிராபியில் 300 விக்கெட்களை பூர்த்தி செய்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion