மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இன்றைய நிகழ்வுகள் உங்களுக்காக.. நேற்றைய செய்தி தகவல்களுக்காக.. காலை 7 மணி தலைப்பு செய்திகள்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- காவிரி விவகாரம் தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்.
- அரியலூர் அருகே தொழிற்சாலையில் பயங்கர விபத்து : நாட்டு வெடிகள் வெடித்து 12 பேர் உயிரிழப்பு - 12 பேர் படுகாயம்
- வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு
- அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
- காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விபத்தில் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காவிரி ஆற்றில் செயற்கையான நெருக்கடியை கர்நாடகம் உருவாக்கி வருகிறது என்றும், காவிரியில் தண்ணீர் திறக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டும் ஸ்டாலின் பேசினார்.
- அன்புமணி ராமதாஸ்க்கு நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
- அக்டோபார் மாதம் 11ஆம் தேதி முதல் அதாவது நாளை வரை தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
- மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா:
- தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.
- நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் மோடியை வலியுறுத்தி காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்.
- பதான், ஜவான் வெற்றி எதிரொலி - ஷாரூக்கானிற்கு கொலை மிரட்டல் வந்தநிலையில் ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்தது மகாராஷ்டிரா மாநில அரசு
- இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் கேரளாவைச் சேர்ந்த ஷீஜா ஆனந்த் என்ற பெண் காயம் அடைந்துள்ளார்.
- உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில், இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
- மேற்கு வங்காளத்தில் கவர்னர் மாளிகை முன் நடந்த தர்ணா போராட்டம் வாபஸ் - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
- பெங்களூருவில் ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
உலகம்:
- இஸ்ரேல் போரை தொடங்கவில்லை; ஆனால் முடித்து வைக்கும் என பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை.
- பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று (அக்டோபர் 9) அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவைச் சேர்ந்த கிளாடியா கோல்டின்க்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- தெற்கு இஸ்ரேல் மீது அண்மையில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,100ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
- ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2,445 ஆக உயர்ந்துள்ளது.
- ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க 3 லட்சம் வீரர்களை குவித்த இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
விளையாட்டு:
- 2023 உலகக் கோப்பை போட்டி: இங்கிலாந்து - வங்காளதேசம் இன்று மோதல்
- 2023 உலகக் கோப்பையின் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது.
- 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- புரோ கபடி லீக் போட்டிக்கான ஏலத்தில் அதிகபட்சமாக ஈரான் அணியின் கேப்டன் ஷட்லோய் சியானேஷ் ரூ.2.35 கோடிக்கு ஏலம் போய் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.
- நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
விழுப்புரம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion