சபரிமலை தரிசனத்திற்கு இனி இந்த விதிகள் கட்டாயம்! முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடுகள்!
பம்பையில் பக்தர்களின் அவசர உதவிக்காக கேரள காவல்துறை 24 மணி நேர சிறப்பு உதவி மையத்தைத் தொடங்கியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு கடந்த 17ந்தேதி முதல் மண்டல பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதியும், மகர விளக்கு மற்றும் ஜோதி தரிசனம் 2027-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதியும் நடைபெற உள்ளன.
இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய விர்ச்சுவல் கியூ (Virtual Queue) முன்பதிவு கட்டாயம் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் அதிகாரப்பூர்வ திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு இணையதளம் அல்லது செயலி வழியாக முன்பதிவு செய்யலாம். விர்ச்சுவல் கியூ முன்பதிவு முற்றிலும் இலவசம். சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் (குறிப்பாக வெளிமாநில பக்தர்கள்) தாங்கள் புறப்படும் முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில், பம்பையில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் அவசர உதவிக்காக கேரள காவல்துறை 24 மணி நேர சிறப்பு உதவி மையத்தைத் தொடங்கியுள்ளது.
நாளை செவ்வாய்கிழமை கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த 16 -ஆம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் சுமார் 3.40 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாட்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சபரிமலை தரிசனத்திற்கான போலி முன்பதிவுகளை தடுக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, சபரிமலை ஆன்லைன் முன் பதிவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த நாளில் தரிசனம் செய்ய வாராதவர்களுக்கு மீண்டும் முன்பதிவு செய்ய அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆதார் இணைக்கப்பட்ட எண்ணுக்கு வரும் ஓ.டி.பி மூலமே இனி ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்துவிட்டு வராதவர்கள் இந்த சீசனில் மீண்டும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது. மாறாக உடனடி தரிசன முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வர முடியாதவர்கள் முன்கூட்டியே முன்பதிவை ரத்து செய்யவோ அல்லது தேதியை மாற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பம்பையில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் அவசர உதவிக்காக கேரள காவல்துறை 24 மணி நேர சிறப்பு உதவி மையத்தைத் தொடங்கியுள்ளது
ட்ரெண்டிங் செய்திகள்






















