PM Modi:பா.ஜ.க. அரசின் தாரக மந்திரம் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!
PM Modi:பா.ஜ.க. அரசின் தாரக மந்திரம் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!
![PM Modi:பா.ஜ.க. அரசின் தாரக மந்திரம் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்! These five years were about reform, perform and transform in the country Says PM Narendra Modi In Lok Sabha PM Modi:பா.ஜ.க. அரசின் தாரக மந்திரம் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/10/b22eb3ccd09e6367511137fcd33fd1491707565641545333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சீர்த்திருத்தம், செயலாக்கம், மாற்றம் ஆகிய மூன்றும் எங்களது தாரக மந்திரமாக இருந்து வருகிறது என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பை பாராட்டி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமர் கோயில் தீர்மனத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதில் உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட நாட்டின் வளர்ச்சி பாதிக்கவில்லை;புதிய நாடாளுமன்றத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றம் நிகழ்ந்துள்ளது
நாட்டின் வளர்ச்சி குறித்து பிரதமர் பேசுகையில்,” ’சீர்த்திருத்தம்’, ’செயலாக்கம்’, ‘மாற்றம்’ என மூன்றும் எங்களின் தாரக மந்திரம். இது மூன்றும் ஓரே காலத்தில் நடப்பது அரிதானது. நாட்டு மக்கள் நிச்சயம் 17-வது மக்களவையின் செயல்பாடுகளை கண்டு பாரட்டாவும் ஆசிர்வத்க்கவும் செய்வார்கள். இந்த ஐந்தாண்டுகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. வலுவான நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான மாற்றங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் நிகழ்ந்துள்ளன.” என்று நாடு வளர்ச்சி பாதையில் பயணிப்பது குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
புதிய நாடாளுமன்றம் திறப்பு குறித்து பேசுகையில், ” புதிய நாடாளுமன்றம் வேண்டும் என்று எல்லாரும் பேசி வந்தார்கள். ஆனால், அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சபாநாயகர் உறுதியுடன் இருந்ததால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் சாத்தியமானது.”என சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு (Om Birla) பாராட்டிக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓம் பிர்லா குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,” நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடே எல்லாவற்றையும் அணுகியிருக்கிறீர்கள். மக்களவையில் விவாதம், குழப்பும், குற்றச்சாட்டுகள் என எல்லா நேரங்களிலும் நீங்கள் அனைத்தையும் சிரிப்புடன் எதிர்கொண்டிருக்கிறீர்கள். சமநிலையுடனும் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவந்தும் எங்களை வழிநடத்தியிருக்கிறீர்கள்.”என சபாநாயகரை பாராட்டினார்.
ஜனநாயகத்தின் தாயகம்
”இந்தியா ஜனநாயகத்தின் தாயகம் என்பதை உறுதி செய்துள்ளது. ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற்றதை கண்டு உலகமே வியந்துள்ளது.ஒவ்வொரு மாநிலமும் தங்களது செயலாற்றலை வெளிப்படுத்தியுள்ளது. அது உலகளவில் இன்றும் பேசப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
97% செயல்பாடு பதிவு
பா.ஜ.க. தலைமையிலான அரசு இதுவரை 97% (17-வது மக்களை ) செயல்பாட்டை பதிவு செய்துள்ளது. இது 100% -மாக மாற வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
”தேர்தல் நெருங்கிவிட்டது. சிலருக்கு பதற்றம் ஏற்படலாம். ஆனால், இது ஜனநாயகத்திற்கு அத்தியாவசியமானது. ஜனநாயகத்தை பின்பற்றி நடக்கும் தேர்தல் நாட்டின் பெருமையை உயர்த்தும்.” என்று தெரிவித்தார்.
"வரும் 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்குவோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களுக்கான பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கசிவு குறித்து இளைஞர்கள் பெரும் கவலை கொண்டனர். அதற்கான சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். தேசத்தின் இளைஞர் சக்தியின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இந்தியா விரைவில் ஆராய்ச்சிக்கான மையமாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்.
மக்களவையில் நரேந்திர மோடி உரையின் முக்கியம்சங்கள்
- 100% முழு அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்ய உறுதி ஏற்றுள்ளோம்.
- ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக கூறுகையில், ”பலரும் இந்த அறிவிப்பிற்காக காத்திருந்தனர். இந்திய அரசியலைப்புச் சட்டத்தை வரைவு செய்தவர்கள் இந்த முடிவுக்காக நம்மை பாராட்டுவர்.” என்று குறிப்பிட்டார்.
- மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
- நாட்டின் கலாச்சாரத்தின் மரபாக நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.
- 370- சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி கூறுகையில்,” ஜம்மு- காஷ்மீருக்கு சமூக நீதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
- இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக ‘முத்தலாக்’ சட்டவிரோதமாக்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)