Family planning kit: குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வில் ரப்பர் ஆணுறுப்பு மாடல்.. சர்ச்சைக்கு உள்ளான அரசு திட்டம்!
குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை பரப்பும் அரசின் திட்டம் தற்போது தலைவலியாக மாறியுள்ளது. அதற்கு காரணம் அரசு கொடுத்துள்ள விழிப்புணர்வு மாதிரிகள். அதில் ரப்பரால் ஆன ஆணுறுப்பும் உள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வுக்கு மகாராஷ்டிரா அரசு கொடுத்துள்ள விழிப்புணர்வு மாதிரிகளால் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல ஆர்வலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமப்புறங்களில் குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை பரப்பும் அரசின் திட்டம் தற்போது தலைவலியாக மாறியுள்ளது. அதற்கு காரணம் அரசு கொடுத்துள்ள விழிப்புணர்வு மாதிரிகள். அந்த மாதிரியில் ரப்பரால் ஆன ஆணுறுப்பும் உள்ளது.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதம்தான் என்றாலும் செக்ஸ் டாய் போல உள்ள அந்த மாதிரியால் கிராமப்புறங்களில் கிண்டலும், கேலியும்தான் மிஞ்சுவதாக அங்கீகரிக்கப்பட்ட சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அங்கீகரிக்கப்பட்ட சமூக நல ஆர்வலர்கள்தான் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் அமரவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு கொடுத்துள்ள மாதிரிகளை எடுத்துக்கொண்டு கிராமப்புறங்களுக்கு வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 25000 மாதிரிகள் மாநிலம் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது.
என்ன சிக்கல்?
இது குறித்து தெரிவித்த அங்கீகரிக்கப்பட்ட சமூக நல ஆர்வலர் ஒருவர், இந்த மாதிரிகளால் நாங்கள் தர்மசங்கடத்துக்குத்தான் ஆளாகிறோம். ரப்பர் ஆணுறுப்பை வெளியே எடுத்தாலே எங்களை நோக்கி கேலியும், கிண்டலும் வருகின்றன. சிலர் கோபப்படவும் செய்கின்றனர். நாங்கள் கிராமத்தினரை கெடுப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள மகாராஷ்டிரா எதிர்க்கட்சியான பாஜக, அரசுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது. உடனடியாக அந்த மாதிரிகளை திரும்பப்பெற வேண்டுமென்றும், சுகாதார பணியாளர்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது
புதுச்சேரி : பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்.. இதை படிங்க முதல்ல..
மருத்துவர்கள் சொல்வது என்ன?
ரப்பரால் ஆன ஆண்குறிக்கு மருத்துவர்கள் தரப்பில் ஆதரவே கிடைத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர் அர்ச்சனா பாடில், இந்த மாதிரிகள் பயனுள்ளவை. வெறுமனே தியரியாக சொல்வதை விடவும், இது பயனளிக்கும். எப்படி ஆணுறை மாட்டுவது போன்ற விழிப்புணர்வை தெளிவாக விளக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள பாலியல் நிபுணர் ஒருவர், ரப்பர் மாதிரிகளால் தவறான கருத்துகள் பரப்பப்படும் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதுதான் மக்கள் பிரச்னைகளை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ள உதவும் என்றார்.
எல்லைக்காக சண்டையிடும் புலிகள்.. புலிகளோடு சண்டையிடும் சிறுத்தைகள்.. ஆச்சர்யத்தில் சுற்றுலா பயணிகள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்