மேலும் அறிய
Advertisement
Morning Wrap | 27.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்....!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை பவானிதேவி முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில் போராடி இரண்டாவது சுற்றில் தோல்வி
- வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியீடு – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் நன்றி
- அசாம் – மிசோரம் எல்லையில் சாலை அமைக்கும் பணியில் மோதல் – பாதுகாப்பு படையினர் 6 பேர் உயிரிழப்பு
- அசாம் மாநிலத்துடனான எல்லை பிரச்சினையில் உள்துறை அமைச்சர் தலையிட வேண்டும் – மிசோரம் முதல்வர் வலியுறுத்தல்
- முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா- அமைச்சரவையை கலைத்து ஆளுநர் உத்தரவு
- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
- டெல்லியில் பிரதமர் மோடியுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்திப்பு
- தமிழகத்தில் அடுத்த மாதம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பு – மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
- மதுரை, எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க மத்திய அரசு பரிந்துரை – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
- தமிழ்நாட்டிற்கென்று மேலும் 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது
- சென்னை கீழ்ப்பாக்கத்தில் 3 பழம்பெரும் சிலைகள் மீட்பு – சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ்கபூரின் கூட்டாளி கைது
- சர்கார் பட விவகாரத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து
- தமிழ்நாட்டில் புதியதாக ஒரே நாளில் ஆயிரத்து 1755 பேருக்கு கொரோனா உறுதி
- மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் 26 பேர் உயிரிழப்பு
- சென்னை மற்றும் புறநகரில் நள்ளிரவில் பலத்த மழை
- தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு
- கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் 51 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி
- ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜயின் மேல்முறையீடு மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணை
- தொடர் கனமழை – கர்நாடகவின் வட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு
- மகாராஷ்ட்ராவில் மழை மற்றும் வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு – 100 பேர் மாயமானதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம்
- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது
- தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறவியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது
- இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்கிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion