மேலும் அறிய
Headlines Today, 22 Oct: சேலம் இளங்கோவன் வீட்டில் ரெய்டு... வெளுக்கப் போகும் மழை.. 100 கோடி தடுப்பூசி.. இன்னும் பல!
Headlines Today, 21 Oct: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.
![Headlines Today, 22 Oct: சேலம் இளங்கோவன் வீட்டில் ரெய்டு... வெளுக்கப் போகும் மழை.. 100 கோடி தடுப்பூசி.. இன்னும் பல! Tamil News Headlines today Latest News Updates in tamil Headlines Today, 22 Oct: சேலம் இளங்கோவன் வீட்டில் ரெய்டு... வெளுக்கப் போகும் மழை.. 100 கோடி தடுப்பூசி.. இன்னும் பல!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/22/7305906caaec44cf2a725bd450ae13ca_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தலைப்புச் செய்திகள்
இந்தியா:
- அக்டோபர் இறுதியில் ஸ்காட்லாந்தில் நடைபெறவுள்ள பருவநிலை தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்
- ஐப்பசி மாதம் பூஜை நிறைவு - சபரிமலையில் நடை அடைப்பு
- 100கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டிய இந்தியா - நாடு முழுவதும் மூவர்ணத்தில் ஒளிர்ந்த நினைவுச் சின்னங்கள்
- விவசாயிகளுக்கு போராட உரிமை உண்டு - பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை மறித்து போராடக் கூடாது - உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு:
- மாநில கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவனின் சேலம் வீடு உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை. இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்.
- காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மறைமுகத் தேர்தல் - மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலைவர், துணைத் தலைவர் இன்று தேர்வு
- இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொளத்தூர் தொகுதியில் கபாளீஸ்வரர் கலைக்கல்லூரி துவக்கம் - 11 பேராசியர்களுக்கு பணி நியமன ஆணைகள்
- ஈரோடு மாவட்டத்தில் விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் - சேலத்திலும் பலத்த மழை
- தென்காசி வாசுதேவன்நகர் அருகே 2000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுப்பு - விரைவில் ஆய்வுக்கு தொல்லியல் துறை திட்டம்
- நெருங்கும் தீபாவளி - முக்கிய நகரங்களில் சூடு பிடிக்கும் பட்டாசு விற்பனை
- அறநிலையத்துறை சார்பில் சென்னை, நெல்லை, பழனியில் முதியோருக்கு உறைவிடங்கள்
- அரக்கோணத்தில் சரக்கு ரயிலில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து - திருத்தணி டூ அரக்கோணம் வரும் ரயில்கள் காலதாமதம்
- தமிழகத்தில் மேலும் 1164 பேருக்கு கொரோனா பாதிப்பு - 20 பேர் உயிரிழப்பு
#TamilNadu | #COVID19 | 21 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 21, 2021
Today/Total - 1,164 / 26,91,797
Active Cases - 13,790
Discharged Today/Total - 1,412 / 26,42,039
Death Today/Total - 20 / 35,968
Samples Tested Today/Total - 1,29,820 / 4,99,22,030***
Test Positivity Rate (TPR) - 1.0%#TNCoronaUpdate #TN pic.twitter.com/SSuGRwWdVu
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு
உலகம்:
- ரஷ்யாவை மிரட்டும் கொரோனா - தினசரி நோய்ப்பாதிப்பு 37ஆயிரமாக உயர்வு
- பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் பாகிஸ்தான்
- சொந்த தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ராக்கெட்டை ஏவி சோதனை செய்தது தென்கொரியா
விளையாட்டு:
- உலகக் கோப்பை டி20 - சூப்பர் 12 சுற்றில் தகுதிபெற்றது ஸ்காட்லாந்து
வானிலை:
- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தேர்தல் 2025
பட்ஜெட் 2025
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion