மேலும் அறிய

News Headlines: சிக்கியது டி23... முடிந்தது டி20.... தூத்துக்குடியில் டி18.... இன்னும் பல!

Headlines Today, 16 Oct: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.

விளையாட்டு:  

துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், நான்காவது முறையாக சென்னை அணி இது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. 

தமிழ்நாடு: 

  • நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்பட்ட T-23 புலி தெப்பக்காடு-மசினக்குடி சாலை பகுதியில் நேற்று பிடிபட்டிடது.  
  • இலங்கைக் கடற்படை சிறை பிடித்துள்ள 23 மீனவர்களை உடனே விடுவிக்கவும், இந்தியா - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைசச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
  • மத்திய கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புதிதாக இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி  உருவாகியுள்ளதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
    News Headlines: சிக்கியது டி23... முடிந்தது டி20.... தூத்துக்குடியில் டி18.... இன்னும் பல!
  • சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 8 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, உச்சநீதிமன்றம் - தேசிய பசுமை தீர்பாணையம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டுமெனக் கோரி 4 மாநில முதலமைச்சர்களுக்குக் தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார்.  
  •  சென்னை அய்யப்பாக்கத்தில் உள்ள ஐசிஎம்ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில், ஐசிஎம்ஆர் பொது சுகாதார பள்ளியின் புதிய கட்டிடத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
  • தூத்துக்குடியில் 18 வழக்குகளில் தேடப்பட்டு வந்த துரைமுருகன் என்ற குற்றவாளியை காவல்துறை என்கவுண்டர் செய்தனர். இந்த, தூத்துக்குடி என்கவுண்டர் நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர். 

இந்தியா: 

  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி நேற்று 7 புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக, ஆயுத தொழிற்சாலை வாரியத்தை ஒரு அரசு துறையிடம் இருந்து, 100 சதவீதம் அரசுக்கு சொந்தமான 7 பெருநிறுவனங்களாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதற்கேற்ப, 7 புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள்  மியூனிசன்ஸ் இந்தியா லிமிடெட் (MIL), ஆர்மர்ட் வெயிக்கல்ஸ் நிகாம் லிமிடெட் (AVANI); அட்வான்ஸ்டு விபான்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் நிறுவனம் (AWE India); ட்ரூப் கம்போர்ட்ஸ் லிமிடெட் (TCL); யந்திரா இந்தியா நிறுவனம்  (YIL); இந்திய ஆப்டெல் நிறுவனம்  (IOL); மற்றும் கிளைடர்ஸ் இந்தியா நிறுவனம்  (GIL) ஆகிய பெயர்களில் இணைக்கப்பட்டுள்ளன. 
  • உலகளாவிய பட்டினி அறிக்கை 2021யில் அடிப்படை யதார்த்தம் மற்றும் உண்மை அல்லாதது என பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் சரியான முறைகள் பின்பற்றப்படவில்லை எனவும்,  அறிக்கையை வெளியிடும் முன், அதை வெளியிட்ட நிறுவனங்கள் அதை சரிபார்ப்பதில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget