மேலும் அறிய

காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 38,603 பேரும், தமிழகத்தில் 33,075 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்

*மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடல், அவர் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்படுகிறது.  

*மறைந்த எழுத்தாளர் கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும் அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடைய புகைப்படங்கள் படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும் பொது மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும். மேலும், கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்தெரிவித்தார்.

காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

*ஊடகத்துறையினர் ஊரடங்கின்போது வெளியே செல்வதற்கும், பணி செய்வதற்கும் அடையாள அட்டை போதுமானது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.  

*சென்னையின் அனைத்து 15 மண்டலங்களிலும், கோவிட் நோயால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்க, 135 பேர் கொண்ட தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

*கொரோனா நோய்த் தொற்றை கையாள்வதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, மாநிலங்கள் மற்றும் மாவட்ட கள அதிகாரிகளுடன் பிரதமர்  நரேந்திர மோடி நேற்று காணொலி மூலமாக கலந்துரையாடினார்.

*கேரளாவில், முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையிலான 21 பேர் கொண்ட புதிய அமைச்சரவை, மே 12 புதனன்று, திருவனந்தபுரத்தில் பதவியேற்கிறது. கொரோனா தொற்றின் முதல் அலை கேரளாவை தாக்கியபோது, அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஷைலஜா டீச்சர் புதிய அமைச்சரவையில் இடம் பெறவில்லை. 

காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள் 

*புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1791 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. 33 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.  தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கையை விட புதிய பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14477 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.     

*நாடு முழுவதும் முதன்முறையாக நேற்று ஒரே நாளில்  நான்கு லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,22,436 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் சராசரியாக தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை சுமார் 3,55,944 ஆக பதிவாகியுள்ளது.

*கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 38,603 பேரும், தமிழகத்தில் 33,075 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 4,329 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

*ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் தமிழகத்திற்கு இதுவரை 350.22 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு  விநியோகிக்கப்பட்டுள்ளது. கடைசியாக மே 17 அன்று ஒடிசா மாநிலத்தின் கலிங்கா நகரில் உள்ள டாட்டா எஃகு ஆலையிலிருந்து 2 டேங்கர்களில் 40 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு தமிழகம் வந்தடைந்தது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget