”இந்த ட்ரெஸ்ஸை போட்டுக்கிட்டு ஹிஜாப்பை பத்தி பேசுறியா?” : பாஜக உறுப்பினருக்கு பதிலடி கொடுத்த ஸ்வரா..
அவர் மாடர்ன் உடை அணிந்திருந்த ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவர் ட்வீட் செய்து கேலி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா ஹிஜாப் அணியும் உரிமை விவகாரத்தில் பல்வேறு முன்னணி நபர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அப்படி கருத்து பதிவு செய்பவர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் சிலர் சமூக வலைத்தளங்களில் எதிர்கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த வரிசையில் பாலிவுட் நடிகர் ஸ்வாரா பாஸ்கரும் விதிவிலக்கல்ல. அவர் மாடர்ன் உடை அணிந்திருந்த ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பாரதிய ஜனதா பிரமுகர்கள் தொடர்ச்சியாக ட்ரால் செய்து வருகின்றனர்.
Good afternoon Tweeple! Here is a sample RW tweet salad 🥗 comprising Of Sanghis & their total failure to understand the concept of choice; their pathetic slut-shaming, and garnished with a desperate attempt to seem intellectual by quoting Urdu Shaayars 😂
— Swara Bhasker (@ReallySwara) February 16, 2022
Enjoy!! 💛✨🤗 pic.twitter.com/3fp1rjVMAT
குறிப்பாக மேற்கு வங்க பாஜ மகளிர் அணித்தலைவர் ஒருவர் ட்வீட் செய்து கேலி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஸ்வரா பாஸ்கரும் பதிலடி கொடுத்துள்ளார்.
That is @ReallySwara my friends, who is advocating for Hijab. pic.twitter.com/hkGigxaV9R
— Keya Ghosh (@keyakahe) February 12, 2022
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா மகளிர் அணி உறுப்பினரான கேயா கோஷ் என்பவர் ஸ்வராவின் மாடர்ன் உடை அணிந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்தார் மேலும், ‘இப்படி உடை அணிந்திருக்கும் ஸ்வராதான் ஹிஜாப் உரிமை பற்றி பேசுகிறார்’ எனக் கூறி அவர் உடையை கேலி செய்தார்.
Yeah, it’s me.. looking bomb 🔥 Thank u! 🤗🙏🏽
— Swara Bhasker (@ReallySwara) February 16, 2022
Thanks for sharing this pic of mine & reminding the world that I’m also a hottie ! 🤓
I advocate Women’s right to choose their clothing.. you know ‘choice’ -koi nahi aap rehney doh.. aap karo slutshame kisi aur ko- usmey bhi fail 😆 https://t.co/OvvHN9VXnn
இதற்கு பதிலளித்துப் பேசியுள்ள ஸ்வரா, ‘ஆம் அது நான் தான். நான் ஹாட்டாக இருக்கிறேன் என்பதை இந்த உலகத்துக்கு நினைவூட்டியதற்கு நன்றி. ஆனால் நான் பெண்களுக்கு அவர்களுக்கான ஆடை உரிமை குறித்துப் பேசுகிறேன். ’சாய்ஸ்’ குறித்து உங்களுக்குத் தெரியுமா?’, அதனால் நீங்கள் வேறு யாரையாவது ஸ்லட் ஷேம் செய்யுங்கள். அதிலும் நீங்கள் தோல்விதான் அடைவீர்கள்’ எனக் கூறியுள்ளார்.