மேலும் அறிய

கேரளாவில் வியக்க வைக்கும் எண்ணிக்கை! தமிழகம் ஏன் பின்தங்கியது? நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு!

கேரளாவின் முதலாவது தேசிய பூங்கா என்பதுடன், வரையாடுகள் அதிகம் இருக்கும் இடமாகவும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள், வேறு எங்கும் இல்லாத வகையில், கேரள மாநிலம் இரவிக்குளம் தேசிய பூங்காவில், 841 இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில், யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், வரையாடுகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை, 2022ல் அரசு அறிவித்தது.

கேரளாவில் வியக்க வைக்கும் எண்ணிக்கை! தமிழகம் ஏன் பின்தங்கியது? நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு!

கோவையில் இதற்கென தனி அலுவலகம் துவங்கப்பட்டு, வரையாடுகள் வாழ்விட பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அடையாளமாக வரையாடுகள் அறிவிக்கப்பட்டாலும், வரையாடுகள் பாதுகாப்பில் கேரள வனத்துறை புதிய உயரத்தை அடைந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இரவிக்குளம் பகுதி, 1975ல் வன உயிரின சரணாலயமாகவும், 1978ல் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது பொன்விழா ஆண்டில் உள்ளது.

கேரளாவின் முதலாவது தேசிய பூங்கா என்பதுடன், வரையாடுகள் அதிகம் இருக்கும் இடமாகவும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கேரள வனத்துறையுடன் தமிழக அரசு இணைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. தமிழகத்தில், வரையாடுகள் எண்ணிக்கை, தற்போது, 1,303 ஆக உள்ளது. கேரளாவில், 1,365 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில், இரவிக்குளம் தேசிய பூங்காவில் மட்டும், 2024ல் 827 ஆக இருந்த வரையாடுகள் எண்ணிக்கை, இந்த ஆண்டு, 841 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே இடத்தில் அதிகபட்சமாக, 200 வரையாடுகள் வரை மட்டுமே இருக்கின்றன.

கேரளாவில் வியக்க வைக்கும் எண்ணிக்கை! தமிழகம் ஏன் பின்தங்கியது? நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு!

ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் வரையாடுகள் வாழ்வதற்கான காரணங்கள் குறித்து, வன உயிரியல் ஆர்வலர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.  இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கையில், இது குறித்து, 'தி நேச்சர் டிரஸட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது, தமிழகத்தில் கிடைத்த அனுபவம் அடிப்படையில், வரையாடுகளை மிக தொலைவில் தான் பார்க்க முடியும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், கேரள மாநிலம், இரவிக்குளத்தில் மக்கள் நடமாடும் இடங்களுக்கு வரையாடுகள் தானாக வருகின்றன. மக்கள் எவ்வித அச்சமும் இன்றி, வரையாடுகளை மிக நெருக்கமாக பார்ப்பதற்கான சூழல் அங்கு நிலவுகிறது. கேரள எல்லையில் உள்ள ராஜமலையில் காணப்படும் ஒருவகை புற்கள் தான், வரையாடுகள் அதிகம் இருக்க காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, இங்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் புற்கள் தீயிட்டு எரிக்கப்படும்.

கேரளாவில் வியக்க வைக்கும் எண்ணிக்கை! தமிழகம் ஏன் பின்தங்கியது? நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு!

இதன்பின், பருவமழை துவங்கும் போது, புதிதாக செழிப்பான புற்கள் அதிகமாக வளரும். இதுவே, வரையாடுகள் இங்கு தொடர்ந்து முகாமிட காரணமாக பார்க்கப்படுகிறது. பழங்குடியினர் தொடர்ந்து செய்து வந்த இந்த நடைமுறை தற்போதும் தொடர்வதால், இப்பகுதி, வரையாடுகளின் நிரந்தர புகலிடமாக மாறியுள்ளது. ராஜமலையின் மறுபக்கத்தில், தமிழகத்தின், 'கிராஸ் ஹில்ஸ்' தேசிய பூங்கா அமைந்துள்ளது. இரவிக்குளத்தில் இருந்து, 'கிராஸ் ஹில்ஸ்' பகுதிக்கு வரையாடுகள் கூட்டமாக வந்து செல்வது வழக்கம். எனவே, வரையாடுகளின் தேவை அறிந்து, அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக வனத் துறை திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget