அசாமிற்கு மட்டும் குடியுரிமை சட்டப்பிரிவு 6A செல்லும்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு: சட்டம் சொல்வது என்ன?
Assam Accord: குறிப்பிட்ட காலத்தில் வங்கதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட இந்திய குடியுரிமை பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
1966 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட இந்திய குடியுரிமை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கு என்ன?
1966 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், வங்கதேச நாட்டிலிருந்து அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களுக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் 1955 ல் சட்டப்பிரிவு 6 A சேர்க்கப்பட்டது.
வங்காளதேசத்தில் இருந்து அகதிகளின் வருகை அசாமின் மக்கள்தொகை சமநிலையை பாதித்துள்ளது என்றும் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A மாநிலத்தின் அரசியல் மற்றும் கலாச்சார உரிமைகளை பாதிக்கிறது எனவும் கூறி, பிரிவு 6Aவை ரத்து செய்யுமாறு NGO Citizens for Justice and Peace உள்ளிட்ட அமைப்புகள் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.
தீர்ப்பு:
இந்நிலையில், அசாமில் மட்டும் 6 A பிரிவை அமல்படுத்தும் முடிவு தொடர்பாக வழக்கானது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜே.பி. பர்திவாலா மட்டும் பிரிவு 6 ஏக்கு எதிராக ஆதரவு தெரிவித்தார். இந்நிலயில் தலைவமை நீபதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த், எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் ஆதரவுடனும் 4:1 என்ற பெரும்பான்மையில் 6ஏ பிரிவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் 6 ஏ செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது,
பிரிவு 6 A:
வங்காளதேச விடுதலைப் போரின் போது பெரும் அகதிகள் வருகை புரிந்த நிலையில், ஆகஸ்ட் 15, 1985 அன்று அஸ்ஸாம் இயக்கத்தினருக்கும், மத்திய அரசுக்கு இடையே அஸ்ஸாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. மனிதாபிமான நடவடிக்கையாக, புலம்பெயர்ந்தோர் இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கு குடியுரிமைச் சட்டத்தில் பிரிவு 6A சேர்க்கப்பட்டது. மார்ச் 25, 1971க்குப் பிறகு அசாமில் குடியேறியவர்களுக்கு இந்தத் தீர்ப்பு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில், தற்போது பிரிவு 6A செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.