மேலும் அறிய

மக்களவை தேர்தலுக்கு முன்பாக மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? உச்ச நீதிமன்றம் பரபர பதில்

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகிதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் மசோதாவை நிறைவேற்ற பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவகவுடா தொடங்கி வாஜ்பாய், மன்மோகன் சிங் வரையில் பலரின் ஆட்சி காலத்தில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடந்த 2010ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றியது. மாநிலங்களவையில் நிறைவேற்றினாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், அதை மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. 

2024 தேர்தலுக்கு முன்பாக மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா?

இதை தொடர்ந்து, கடந்த 13 ஆண்டுகளாக மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக தலைமையிலான அரசு மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தலிலேயே மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

106ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் இந்த மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசியலைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?

ஜெயா தாக்கூர் என்பவர் தொடர்ந்த மனுவில், "குறிப்பிட்ட அந்த வாசகத்தை மட்டும் செல்லாது என அறிவிக்க வேண்டும். சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை காலவரை இன்றி தள்ளி வைக்கக்கூடாது" என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பல முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது.

அரசியலில் பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் இது மிக சிறந்த முயற்சி என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக தலையிடுவதில் பல சந்தேகங்களை கிளப்பிய உச்ச நீதிமன்றம், "இதை செய்வது மிக கடினமான ஒன்று. வெளியில் இருந்து கொண்டு நாங்கள் சட்டத்தை இயற்றுவது போல அமைந்துவிடும்" என தெரிவித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ். வி. என். பட்டி ஆகியோர் கொண்ட அமர்வு, வழக்கின் விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

'பிரதமர் பதற்றத்தில் இருக்கிறார்' மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரியங்கா காந்தி காட்டம்
'பிரதமர் பதற்றத்தில் இருக்கிறார்' மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரியங்கா காந்தி காட்டம்
Delimitation: தொகுதி மறுவரையறை.. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் தொகுதிகள்.. எத்தனை தெரியுமா?
Delimitation: தொகுதி மறுவரையறை.. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் தொகுதிகள்.. எத்தனை தெரியுமா?
PNG Gas: புக்கிங் செய்ய வேண்டாம்.. காத்திருக்கவும் வேண்டாம்.. இந்தியாவின் சமையல் முறையை மாற்றும் BPCL PNG!
PNG Gas: புக்கிங் செய்ய வேண்டாம்.. காத்திருக்கவும் வேண்டாம்.. இந்தியாவின் சமையல் முறையை மாற்றும் BPCL PNG!
Amit Shah vs Akhilesh Yadav:
Amit Shah vs Akhilesh Yadav: "வீடுகளுக்கு சாதி கிடையாது" அமித் ஷாவின் ஒத்த வார்த்தை..மக்களவையில் வெடித்த வார்த்தைப் போர்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TVK Vijay: சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
TVK Manifesto 2026: ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!
TVK Manifesto 2026: ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!
PM Modi On Women Quota Bill: “இதை எதிர்த்தால், பெண்களே உங்களை விட்டுவைக்க மாட்டார்கள்“; எதிர்க்கட்சிகளுக்கு மோடி எச்சரிக்கை
“இதை எதிர்த்தால், பெண்களே உங்களை விட்டுவைக்க மாட்டார்கள்“; எதிர்க்கட்சிகளுக்கு மோடி எச்சரிக்கை
ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
Tasmac Holiday : 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! எப்போ தெரியுமா.? மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! எப்போ தெரியுமா.? மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
Embed widget