மேலும் அறிய

Atiq Ahmed : கொலையாளிகளுக்கு தெரிந்தது எப்படி? ரவுடி அத்திக் அகமது கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!

இன்று நடைபெற்ற விசாரணையின்போது, இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் போலீஸ் காவலில் இருந்த பிரபல ரவுடிகள் அத்திக் அகமது, அஷ்ரப் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இன்று நடைபெற்ற விசாரணையின்போது, இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டும் இன்றி, ஏப்ரல் 13ஆம் தேதி ஜான்சியில் சிறப்பு அதிரடிப்படையினரால் கொல்லப்பட்ட அகமதுவின் மகன் ஆசாத்தின் போலீஸ் என்கவுன்டர் பற்றியும் அறிக்கை தாக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

"கொலையாளிகளுக்கு தெரிந்தது எப்படி?"

அத்திக் அகமது கொலை தொடர்பாக பல முக்கிய கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், "அவர்களுக்கு (கொலையாளிகளுக்கு) எப்படித் தெரிந்தது? சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்தோம். அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரரை ஏன் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை? ஏன் நடக்க வைத்து கொண்டு சென்றார்கள்" என தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த உத்தர பிரதேச அரசு தரப்பு, "நீதிமன்ற உத்தரவின் பேரில் மருத்துவ பரிசோதனைக்காக சகோதரர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதனால், அவர்கள் கொண்டு செல்வது பற்றி பத்திரிகைகளுக்குத் தெரியும். இது தொடர்பாக நாங்கள் ஒரு கமிஷனை நியமித்துள்ளோம்" என தெரிவித்தது.

விசாரணையில், உத்தர பிரதேச அரசின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "இந்த நபர் (அத்திக் அகமத்) மற்றும் அவரது முழு குடும்பமும் கடந்த 30 ஆண்டுகளாக கொடூரமான வழக்குகளில் சிக்கியுள்ளனர். குறிப்பாக இந்த சம்பவம் ஒரு கொடூரமான சம்பவம். கொலையாளிகளை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும், பிரபலம் அடைவதற்காக கொலை செய்ததாக கொலையாளிகள் கூறினர்.

கொலைகளை அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்தனர். கொலையாளிகள் செய்தி புகைப்படக்காரர்கள் வேடத்தில் வந்தனர். அவர்களிடம் பாஸ்கள் இருந்தன. கேமராக்கள் இருந்தன. மேலும், அடையாள அட்டைகளை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர், அவை போலியானது என்று கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 50 பேர் அங்கிருந்தனர். வெளியேவும் இருந்தனர். இப்படிதான், அவர்களால் கொலை செய்ய முடிந்தது" என்றார்.

கொலைக்கான பின்னணி:

கடந்த 2005 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராஜூ பால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞர் உமேஷ் பால். இவரை  கடந்த 2007 ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்தனர். இதுதொடர்பான வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பிரபல ரவுடியுமான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோருக்கு கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிரயாக்ராஜ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. 

இதனிடையே  சில நாட்கள் முன்பு உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அத்திக் அகமதுவின் மகன்கள் ஆசாத் மற்றும்  குலாம் ஆகியோர் ஜான்சியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீசாருக்கும், எதிர் தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆசாத் மற்றும் குலாம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

போலீசார் முன்பே சுட்டுக்கொலை:

இதனையடுத்து உமேஷ் பால் கொலை வழக்கில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பொய்யாகச் சிக்க வைத்து, தாங்கள் உத்தரப்பிரதேச காவல்துறையால் போலி என்கவுன்டரில் கொல்லப்படலாம் என்று கூறி, பாதுகாப்பிற்காக உச்ச நீதிமன்றத்தில் அத்திக் அகமது வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இதனை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். 

இப்படியான சூழலில் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜ் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டிக் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் திடீரென கைத்துப்பாக்கியை எடுத்து இருவரையும் சரமாரியாக சுட்டனர். இதில் அத்திக், அஷ்ரப் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்
கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்
Schools Colleges Leave: புயல் எங்கே உள்ளது? நாளை பள்ளி-கல்லூரிகள் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: வானிலை அப்டேட்.!
Schools Colleges Leave: புயல் எங்கே உள்ளது? நாளை பள்ளி-கல்லூரிகள் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: வானிலை அப்டேட்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்
கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்
Schools Colleges Leave: புயல் எங்கே உள்ளது? நாளை பள்ளி-கல்லூரிகள் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: வானிலை அப்டேட்.!
Schools Colleges Leave: புயல் எங்கே உள்ளது? நாளை பள்ளி-கல்லூரிகள் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: வானிலை அப்டேட்.!
President Visit: உச்சகட்ட பாதுகாப்பில் ஊட்டி! இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் - திட்டம் என்ன?
President Visit: உச்சகட்ட பாதுகாப்பில் ஊட்டி! இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் - திட்டம் என்ன?
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Embed widget