TV Hate Speech Row : டிவி விவாதங்களில் வெறுப்பு பிரச்சாரம்... கடுமையாக கண்டித்த உச்ச நீதிமன்றம்!
வெறுப்பு பிரச்சாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடுமையான பார்வையை முன்வைத்துள்ளது.
சமீப காலங்களாக தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் விவாத நிகழ்ச்சிகள் சில சர்ச்சையில் முடிந்து வருகின்றன. மேலும் அதில் பங்கேற்கும் நபர்கள் வெறுப்பு பிரச்சாரம் தொடர்பான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பான உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி கே.என்.ஜோசப் தன்னுடைய பார்வையை முன்வைத்தார்.
அதில், “தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளரின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் தொலைக்காட்சி விவாதத்தில் ஒருவர் வெறுப்பு பிரச்சாரம் தொடர்பான கருத்துகளை கூற தொடங்கினால் அவரை தடுத்து நிறுத்துவது நெறியாளரின் கடமைகளில் ஒன்று. ஆனால் தொலைக்காட்சி விவாதங்களுக்கு இதுபோன்ற எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.
"Where is our nation headed, if it is hate speech on which we are feeding on" : Supreme Court expresses concern about hate speech in media, stresses on need to have a proper legal framework.
— Live Law (@LiveLawIndia) September 21, 2022
"“Hate Speech completely poisons the very fabric…It cannot be permitted”, Court says. pic.twitter.com/T5fLgUuJ5w
இங்கிலாந்தில் தொலைக்காட்சி விவாதங்கள் வெறுப்பு பிரச்சாரம் வந்ததற்கு கடுமையாக அபராதம் விதிக்கப்பட்டது. அந்தமாதிரியான நடவடிக்கை இந்தியாவில் நடைபெறவில்லை. இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில் வெறுப்பு பிரச்சாரங்கள் டிவி விவாதங்களில் குறையும்.வெறுப்பு பிரச்சாரம் என்பது மிகவும் மோசமான ஒன்று. இது ஒருவரை மெதுவாக கொலை செய்வதற்கு சமமான ஒன்று.
இதுபோன்ற விஷயங்களில் இந்திய அரசு ஏன் இன்னும் மவுனமாக உள்ளது என்பது எங்களுக்கு புரியவில்லை ” எனத் தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய சட்ட ஆணையம் வெறுப்பு பிரச்சாரம் தொடர்பான ஒரு அறிக்கையை முன்வைத்திருந்தது.
அதில், “இந்தியாவில் வெறுப்பு பிரச்சாரம் என்ன வென்று எந்த ஒரு சட்டமும் தெளிவாக விவரிக்கவில்லை. எனினும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலவற்றை பேசுவதை தடுக்க சட்டங்கள் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்திய தண்டனை சட்டத்தில் பிரிவு 153 சி மற்றும் 505 ஏ ஆகிய புதிய பிரிவுகளை சேர்க்கும் வகையில் ஒரு சட்ட வரைவையும் சட்ட ஆணையம் கோரியிருந்தது. எனினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தற்போது வரை எந்தவித முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அதானியின் ஒருநாள் சம்பாத்தியம் : வாய் பிளக்கவைக்கும் புள்ளிவிவரம்!