உடல் உறுப்பு தானம் செய்ய இந்த விஷயம் கட்டாயமில்லை - அதிரடியாக அறிவித்த நீதிமன்றம்
திருமணமான நபர் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புகையில், தன் கணவர் அல்லது மனைவியிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயமில்லை என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொதுவாக திருமணமான பெண்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கணவரின் அனுமதி பெறுவது சட்டத்தில் இல்லாத விதிகளாக உள்ளது.
பிரிந்த கணவரிடமிருந்து நோ அப்ஜெக்ஷன் கேட்ட மருத்துவமனை
ஆனால், தன் திருமணம் தோல்வியுற்ற பின்னும் உடல் தானம் செய்வதற்கு கணவர் அனுமதி பெற வேண்டிய சூழல் டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 8 years of BJP government: 8 ஆண்டுகள் நிறைவுசெய்த பாஜக அரசு... இன்று காணொளி மூலம் முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் !
முன்னதாக கணவரை பிரிந்த அப்பெண் தொடர்ந்த மனுவில், நோய்வாய்ப்பட்ட தன் தந்தைக்கு சிறுநீரக தானம் செய்ய தான் தயாராக இருந்தபோதும், கணவரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) கிடைக்காததால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை தன் விண்ணப்பத்தை பரிசீலிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
உடல் மீதான உரிமை
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, நெருங்கிய உறவினருக்கு உறுப்பு தானம் செய்யும் விஷயத்தில் திருமணமான நபர் ஒருவர் தன் கணவர் அல்லது மனைவியின் சம்மதத்தைப் பெற வேண்டும் என்ற கட்டாயமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: PM Modi Speech: ஆவணங்களில் கையெழுத்திடும்போது மட்டுமே பிரதமர்...மற்ற நேரங்களின் சேவகன் - பிரதமர் மோடி பேச்சு
மேலும், பெண் என்பவள் எவருக்கும் எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்து அல்ல, அவர் ஒரு உயிர். உடல் உறுப்புக்கு வேறொருவர் உரிமை கொண்டாட முடியாது. பெண்ணின் உடல் உறுப்புகள் அந்த தனிப்பட்ட பெண்ணின் உரிமை” என்றும் தெரிவித்துள்ளார்.
சட்ட விதிகளில் இல்லை...
தொடர்ந்து உடல் உறுப்பு தானத்திற்கான விதிகள் குறித்து பேசிய நீதிபதி , சட்ட அமைப்பு, உடல் தானம் செய்ய விரும்பும் திருமணமான நபர், தன் மனைவி அல்லது கணவரிடமிருந்து தடை இல்லா சான்றிதழ் பெறுவதைக் கட்டாயமாக அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Attack on Rakesh Tikait: வேளாண் சட்டப் போராட்டங்களை ஒருங்கிணைத்த ராகேஷ் திகாயத் மீது மை வீசி தாக்குதல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்