Sonia Gandhi : கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி நடைபெறும் : காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி அறிவிப்பு
ஒரு நபர் ஒரு பதவியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க கூடாது என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரு நபர் ஒரு பதவியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கக்கூடாது என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், ஒருவருக்கு ஒரு பதவி, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
We will launch a 'National Kanyakumari to Kashmir Bharat Jodo Yatra' from 2nd October, Gandhi Jayanti. All of us young & all will be joining the 'Yatra': Congress interim president Sonia Gandhi pic.twitter.com/q47XV1cc0w
— ANI (@ANI) May 15, 2022
மேலும், அக்.2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பேரணி நடைபெறும் என ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
#BREAKING | கன்னியாகுமரி-காஷ்மீர் வரை பேரணி - சோனியா காந்தி https://t.co/wupaoCQKa2 | #SoniaGandhi #Congress pic.twitter.com/rVz9pO21kb
— ABP Nadu (@abpnadu) May 15, 2022
ராஜஸ்தானில் நடைபெற்றகாங்கிரஸ் வியூக கூட்டத்தில் "நாங்கள் வெல்வோம், என மூன்று முறை காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்திகூறினார். ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் வியூக கூட்டத்தில் "நாங்கள் வெல்வோம், என மூன்று முறை காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
காங்கிரஸ் வியூக கூட்டம்: பேரணி அறிவிப்பு
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மூன்று நாள் காங்கிரஸ் வியூக கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய சோனியா காந்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, காந்தி ஜெய்ந்தியான அக்டோபர் 2ஆம் தேதி பேரணி நடைபெறும் என தெரிவித்தார். இந்த பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.இப்பேரணியானது சமூக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என தெரிவித்தார். மேலும் தினமும் அரசியலமைப்புச் சட்டத்தில் மீது நடைபெறும் தாக்குதலையும், அரசியலமைப்புச் சட்டத்தின்மீதான அடிப்படை வாதத்தை பாதுகாப்பதாகவும் அமையும் என தெரிவித்தார்.நாங்கள் வெல்வோம்: இக்கூட்டத்தில் பேசியஅவர் "நாங்கள் வெல்வோம், நாங்கள் வெல்வோம் நாங்கள் வெல்வோம் என மூன்று முறை தொண்டர்களிடையே பேசினார். இது தொண்டர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. மேலும் முன்னதாக தொடங்கப்பட்ட மாவட்ட அளவிலான ஜன்ஜக்ரன் அபியான் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜூன்15 ஆம் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்."இந்த விரிவான பிரச்சாரம் பொருளாதார பிரச்னைகளை, வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும்,"என்று அவர் கூறினார்.
பணிக்குழு:மூன்று நாள் மாநாட்டின் முடிவு குறித்து அவர் கூறுகையில், அமைப்பின் விரிவான பரிந்துரைகள் விரைவாக செயல்படுத்தப்படும். மாநில மற்றும் தேசிய தேர்தல்களுக்கான தேர்தல் அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும் அவை பயனுள்ளதாக இருக்கும். குழுவின் விரிவான பரிந்துரைகள் விரைவாக செயல்படுத்தப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். உதய்பூரில் பல்வேறு குழுக்களில் விவாதிக்கப்பட்ட சீர்திருத்தங்களின் செயல்முறையை இயக்க ஒரு பணிக்குழுவை அமைப்பதாகவும் சோனியா காந்தி அறிவித்தார். 2024 மக்களவைத் தேர்தலில் கவனம்செலுத்தும் வகையிலும் இக்குழு பயணிக்கும் என தெரிவித்தார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

