Andhra Pradesh MLC Death: கோர விபத்தில் சிக்கிய ஆந்திர எம்.எல்.சி. மரணம் : சோகம்.. நடந்தது எப்படி?
ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எல்.சி. ஷயிக் சப்ஜி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது கோதாவரி மாவட்டம். கிழக்கு கோதாவரி தொகுதியின் எம்.எல்.சி. ஷயிக் சப்ஜி. இவர் கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுருவில் நடந்த அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்தில் இன்று பங்கேற்றார். இந்த போராட்டம் நடைபெற்ற பிறகு அவர் பீமாவரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
எம்.எல்.சி. மரணம்:
அப்போது, அவர் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அவரது காரை ஓட்டுநர் ஓட்டிக் கொண்டு வந்தார். அவருடன் எம்.எல்.சி.யின் பாதுகாவலர் மற்றும் அவரது உதவியாளர்கள் வந்து கொண்டிருந்தனர். கார் செருகுவாடா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உண்டி மண்டல் என்ற இடம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது, கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. காரில் இருந்த எம்.எல்.சி. ஷயிக் சப்ஜி சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தலையிலும், மார்பிலும் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் எம்.எல்.சி. சரிந்தார். அவருடன் இருந்த பாதுகாவலர், உதவியாளர் மற்றும் காரை ஓட்டிய ஓட்டுநர் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
தொண்டர்கள் சோகம்:
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கே எம்.எல்.சி. ஷயிக் சப்ஜியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், பலத்த காயமடைந்த ஓட்டுனர், எம்.எல்.சி.யின் பாதுகாவலர் மற்றும் உதவியாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகஙிறது.
ஷயிக் சப்ஜி கிழக்கு கோதாவரி – காகிநாடா – கோனசீமா – மேற்கு கோதாவரி – எலுரு டீச்சர்ஸ் தொகுதிக்கு எம்.எல்.சி. ஆவார். இவர் கடந்த 2021ம் ஆண்டு முத் எம்.எல்.சி.யாக பொறுப்பு வகித்து வருகிறார். விபத்தில் எம்.எல்.சி. உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த அவரின் உடல் நாளை காலை அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மறைவிற்கு ஆந்திர அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஆந்திர போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: Rajasthan CM: முதல்முறையாக எம்.எல்.ஏ.. ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்ற பஜன்லால் சர்மா..
மேலும் படிக்க: Parliament Security Breach: மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த விவகாரம்; 4 பேருக்கு 7 நாட்கள் நீதிமன்ற காவல் - சூடுபிடிக்கும் விசாரணை