பசுவை கடத்தினால் சொத்து பறிமுதல் - அசாமில் புதிய சட்டம்!
ட்டவிரோத கால்நடை வியாபாரத்தில் ஈடுபட்டு சேர்த்த சொத்துக்களை சம்பந்தப்பட்டவரிகளின் இடங்களில் சோதனை நடத்தி பறிமுதல் செய்யும் அதிகாரம் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது. ஹிமந்தா பிஸ்வா சர்மா முதலமைச்சராக இருக்கிறார். அந்த மாநிலத்தில் பசுவதையை தடுப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில், கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று பசு பாதுகாப்பு மசோதா அஸ்ஸாம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதில், கோயில் அருகிலோ அதனை சுற்றி ஐந்து கிலோமீட்டரிலோ மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் கடந்த வியாழக்கிழமை பசு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த ஆறு வருடங்களில் சட்டவிரோத கால்நடை வியாபாரத்தில் ஈடுபட்டு சேர்த்த சொத்துக்களை சம்பந்தப்பட்டவரிகளின் இடங்களில் சோதனை நடத்தி பறிமுதல் செய்யும் அதிகாரம் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்திற்கு பசுக்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், அஸ்ஸாம் வழியாக பசுக்களைக் கொண்டு செல்வதை இந்த மசோதா தடை செய்கிறது.
In our mission to strengthen protection of cattle in the state, we have brought an amendment to the Cattle Preservation Act 2021. The new additions will ease transportation of cattle for agricultural purposes & ensure stringent punishment for cattle smugglers. pic.twitter.com/bMqHqQ1X3b
— Himanta Biswa Sarma (@himantabiswa) December 23, 2021
அஸ்ஸாம் வழியாக பிற மாநிலங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறினால் மூன்று முதல் எட்டு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் மூன்று லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Merry Christmas: மார்கழி பெற்றெடுத்த மனிதநேயம்... பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்!
‛கங்குலி இல்லை என்றால் நான் இல்லை... தோனியால் இந்த 'சிங்'அணியின் கிங்’ - ஹர்பஜன் சிங் உருக்கம்!
Petrol Diesel Price: பண்டிகைவிட்டு பண்டிகை வந்தாச்சு... இன்னும் அதே விலையில் பெட்ரோல், டீசல்!