மேலும் அறிய

பணிக்கு திரும்பிய மல்யுத்த வீரர்கள்... அமித் ஷா சந்திப்பை தொடர்ந்து நடந்தது என்ன..? முடிவுக்கு வருகிறதா போராட்டம்..?

பாஜக எம்பிக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினிஷ் போகத் ஆகியோர் தங்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பிக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினிஷ் போகத் ஆகியோர் தங்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.

பணிக்கு திரும்பிய மல்யுத்த வீரர்கள்:

கடந்த மே மாதம் 31ஆம் தேதி, மூவரும் ரயில்வேஸில் தங்கள் பணியில் இணைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக, பல்வேறு விதமான ஊகங்கள் உலா வர தொடங்கின.

குறிப்பாக, கடந்த சனிக்கிழமை மாலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் சந்தித்து பேசினர். இந்த சூழ்நிலையில், மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை கைவிட்டதாக பரவிய செய்தி முக்கியத்துவம் பெற்றன.

போராட்டத்தை கைவிட்டதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்த சாக்‌ஷி மாலிக், "இந்த செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, நாமும் பின்வாங்க மாட்டோம். சத்தியாகிரகத்துடன், ரயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்" என குறிப்பிட்டிருந்தார்.

அமித் ஷா சந்திப்பில் நடந்தது என்ன?

முன்னதாக, அமித் ஷாவை சந்தித்த மல்யுத்த வீரர்கள், "இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சிறுமி உள்பட ஏழு மல்யுத்த வீராங்கனைகள் வைத்த பாலியல் புகார் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.

"சட்டம் தன் கடமையை செய்யும்" என மல்யுத்த வீரர்களிடம் அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளார். அமித் ஷாவுடனான சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கி பேசிய சாக்‌ஷி மாலிக், "ஷாவுடன் சாதாரண உரையாடலை மேற்கொண்டோம். எங்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது - பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்றார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜக எம்பி பிரஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் நாடு முழவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினிஷ் போகத், சங்கீத்போகத் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பிரஜ் பூஷண் சரண் சிங் கலந்து கொண்டதால் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல மல்யுத்த வீரர், வீராங்கனைகள் முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக, தடையை மீறி மல்யுத்த வீரர்கள்,அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக, தடையை மீறி மல்யுத்த வீரர்கள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி செல்ல முயற்சித்தனர். 

அப்போது, காவல்துறை தடுப்புகளை தாண்டி அவர்கள் பேரணியை தொடர முயன்ற போது அவர்களை காவல்துறை சிறைபிடித்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செற்றனர். இதனால் அப்பகுதி களேபரமாக காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி வீரர்களான வினேஷ் போகாத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் இந்த கைது நடவடிக்கைக்கு ஆளாகினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan | செங்கோட்டையனுக்கு V. K. Pandian:  Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
CSK Coach on Dhoni: “தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“தோனியின் முட்டி தேய்ந்துவிட்டது“.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே கோச்...
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
Embed widget