மேலும் அறிய

சபரிமலை யாத்திரை: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது! சிறப்பு பேருந்து வசதி, முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மண்டல பூஜைக்காக நவம்பர் 16ல் கோயில் நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை மகரஜோதி தரிசனம் ஜன.14ல் பொன்னம்பல மேட்டில் காணலாம்.

ஒவ்வொரு வருடமும் சபரிமலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம் அதில் மண்டல பூஜை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நிலையில், இந்த வருடம் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்திற்கான பக்தர்களுக்கான வருகை வெர்ச்சுவல் க்யூ ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

சபரிமலை யாத்திரை: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது! சிறப்பு பேருந்து வசதி, முக்கிய அறிவிப்பு வெளியீடு!

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு சபரிலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம் என்றும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேசம்போர்டு தெரிவித்துள்ளது. மண்டல பூஜைக்காக நவம்பர் 16 கோயில் நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை மகரஜோதி தரிசனம் ஜன.14ல் பொன்னம்பல மேட்டில் காணலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சபரிமலை யாத்திரை: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது! சிறப்பு பேருந்து வசதி, முக்கிய அறிவிப்பு வெளியீடு!

குறிப்பாக சபரிமலை மகரஜோதி, மண்டல பூஜை உள்ளிட்ட விஷேசங்களுக்காக தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களுக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பம்பைக்கு நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கேரளம் பம்பை வழியாக சபரிமலைக்கு செல்கின்றனர். இதனால், போக்குவரத்து துறை தமிழகத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது.
 
அந்த வகையில் சென்னை, அக்டோபர் 28ம் தேதியிலிருந்து  சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு ஆகிய திருவிழாக்களை முன்னிட்டு நவம்பர் 16-ஆம் தேதி முதல் ஜனவரி 16 வரை இரு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 16 முதல் 2026 ஜனவரி 16 வரையில் (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சபரிமலை யாத்திரை: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது! சிறப்பு பேருந்து வசதி, முக்கிய அறிவிப்பு வெளியீடு!
 
சபரிமலை தேவசம் போர்டு அறிவிப்பின்படி டிசம்பர் 27 முதல் டிசம்பர் 30 வரை மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29 வரை இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. நிகழாண்டு  பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான  முறையில் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி செய்து தரப்படும். 60 நாள்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப் பேருந்துகளுக்கு இணையதளம் மூலமாக www.tnstc.in மற்றும் TNSTC எனப்படும் செயலி மூலமகாவும் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி:9445014452 9445014424, 9445014463 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget