மேலும் அறிய

Sabarimala Temple : சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு... இந்த தேதிகளில் சிறப்பு ரயில்கள் செல்லும்.. முழு விவரம்...

எர்ணாகுளம் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு இரயில் தஞ்சை, கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை வழியாக இயக்கப்பட உள்ளது.

எர்ணாகுளம் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் தஞ்சை, கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை வழியாக இயங்க உள்ளது.

சபரிமலைக்கு மிக அருகே இருக்கும் புனலூர் இரயில் நிலையம் வழியாக முதன்முறையாக ஒரு சிறப்பு இயக்கப்படவுள்ளது. சென்னை மாநகர் மற்றும் தமிழக டெல்டா மாவட்ட ஐயப்ப சுவாமிகளுக்கு வசதியாக ஐயப்பன் கோவிலின் மிக அருகாமையில் உள்ள சபரிமலை நுழைவாயிலான "புனலூர் வழியாக" அகல இரயில் பாதை மாற்றத்திற்குப் பிறகு முதன்முறை ஆக இயக்கப்பட உள்ளது. 

இந்த ரயில்  தாம்பரத்திலிருந்து விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் மாநகர்), சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை  , "புனலூர் (சபரிமலை)", கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளம் (கொச்சி) வரை இயக்கப்பட உள்ளது.

2022 நவம்பர் 28-ஆம் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி 2023 வரை திங்கள்தோறும் எர்ணாகுளத்திலிருந்தும், செவ்வாய்தோறும் தாம்பரத்திலிருந்தும் ஆறு சேவைகள் இயங்கும். அதன்படி,  இரண்டுக்கு குளிர்சாதன பெட்டி - 1, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி - 2, படுக்கை வசதி பெட்டிகள் - 7, பொது பெட்டிகள் - 2,  மாற்று திறனாளிகள் பொது பெட்டிகள் - 2 என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன 

இந்தச் சிறப்பு ரயிலுக்கு புனலூர் ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக கேரள அரசின் சிறப்புப்பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டு உள்ளனர். பழைய 100 ஆண்டுகள் பாரம்பரிய சபரிமலை ரயில் வழிப்பாதையான செங்கோட்டை-புனலூர்-கொல்லம் இரயில் வழித்தடத்தை பயன்படுத்தி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்பழா ஆகிய ஐயப்ப திருத்தலங்களுக்கும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி யாத்திரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜை:

கேரள மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவது வழக்கம். சபரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து சபரிமலை கோயிலில் மண்டல பூஜைக்காக பக்தர்கள் அக்டோபர் 17ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டனர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். மழை, பணி என எதையும் பொருட்படுத்தாமல் நீண்டு வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி, ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 8 நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது

 

 

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget