மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு: அதிர்ச்சி கைது! தலைமை அர்ச்சகர் சிக்கினார்! உண்மை என்ன?

சபரிமலை கோயில், தங்கத் திருட்டில் முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்லி தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரரு என்பவரைச் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கு இப்போது சூடுபிடித்துள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாகப் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே தங்கத் திருட்டில் முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்லி தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரரு என்பவரைச் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு: அதிர்ச்சி கைது! தலைமை அர்ச்சகர் சிக்கினார்! உண்மை என்ன?

கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாகக் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரிக்கும். முறையாக விரதம் இருந்து பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.  இதற்கிடையே சபரிமலை கோயிலில் கடந்த 2019ல் அரங்கேறிய தங்கத் திருட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது அப்போது நடந்த புனரமைப்புப் பணிகளின்போது கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் இருந்த தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டன.

அப்போது தான் தங்கம் திருட்டு போனது. துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம், கருவறை கதவுகளில் இருந்த தங்கம் எனச் சுமார் 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாகக் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இடையில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இப்போது அந்தக் குழுவே விசாரணையைக் கவனித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு: அதிர்ச்சி கைது! தலைமை அர்ச்சகர் சிக்கினார்! உண்மை என்ன?

இதற்கிடையே இன்றைய தினம் சபரிமலை தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரரு என்பவர் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் விசாரணைக்காக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள SID அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். உன்னி கிருஷ்ணன் போற்றி என்பவருடன் ராஜீவரவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், தங்கத் திருட்டு சம்பவத்தில் அவருக்கு முக்கியப் பங்கு இருந்ததாகவும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உன்னி கிருஷ்ணன் போற்றியை சபரிமலைக்கு அழைத்து வந்ததே கண்டரரு ராஜீவரவுதான் என்று கைது செய்யப்பட்ட வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில், SID அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை ராஜீவரவை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்தனர். பிற்பகல் வரை அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னரே, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இதில் மேலும் பலர் சிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Embed widget