மேலும் அறிய

Sabarimala Temple : துலாம் மாத பூஜை.. சபரிமலை மலை கோவில் திறப்பது எப்போது? இதோ விவரம்..

Sabarimala Temple : கேரளா: அக்.17ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

Sabarimala Temple : கேரளா: அக்.17ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாதத்தின் ஐப்பசி, மலையாளத்தின் துலாம் மாத பூஜைக்காக கோயில் நடைவரும்  17-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

கேரள மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவது வழக்கம். சபரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ் மாதத்தின் ஐப்பசி, மலையாளத்தின் துலாம் மாத பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோயில் நடை அக்டோபர் 17ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. மேலும் அக்டோபர் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் ஐயப்பன் கோயிலில் பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஐயப்பன் திருக்கோயிலில் இந்தாண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் 15ஆம் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.

இதனை அடுத்து சபரிமலை கோயிலில் மகர, மண்டல பூஜைக்காக பக்தர்கள் நவம்பர் 16ம் தேதி முதல் அனுமதிக்கப்பட உள்ளனர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கேரள  அரசின் உத்தரவுக்கு இணங்க சுவாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்துவர வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை, அத்துடன் மண்டலப் பூஜைகள் முடிவடைந்து டிசம்பர் 27 ஆம் தேதி இரவு 10 மணிக்குதான் நடை சாத்தப்படும். பின்பு மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலின் நடை டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் உலகப் புகழ்ப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறும். இதற்கு அடுத்து மகர விளக்கு பூஜை நிறைவடைந்து ஜனவரி 20ம் தேதி கோயிலின் நடை சாத்தப்படும். இந்நிலையில் கேரள மாநிலத்தின் விஷு வருட பிறப்புக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை திறக்கப்படும். 

தலைப்பு செய்திகள்

இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget