இப்படி ஒரு தாவரமா? இமயமலைப் பகுதியில் கண்டறியப்பட்ட அரிய வகை செடி!
உத்தரகண்ட் மாநிலத்தில் பூச்சி உண்ணும் தாவரங்கள் பற்றிய ஆய்வின்போது இந்த அரிய வகை தாவர இனம் கண்டறிப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பூச்சி உண்ணும் தாவரங்கள் பற்றிய ஆய்வின்போது இந்த அரிய வகை தாவர இனம் கண்டறிப்பட்டுள்ளது.
மிக அரிய வகை பூச்சி உண்ணும் தாவிர இனமான யூட்ரிகுலேரியா ஃபர்செல்லாட்டா முதல்முறையாக மேற்கு இமயமலைப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இதை மூத்த அலுவலர் சனிக்கிழமையன்று உறுதி செய்துள்ளார்.
சமோலி மாவட்டத்தில் உள்ள மண்டல் பள்ளத்தாக்கில் இந்த அரிய வகை தாவர இனத்தை உத்தரகண்ட் வனத்துறையின் ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்துள்ளது என தலைமை வனப் பாதுகாவலர் (ஆராய்ச்சி) சுவாதி சுதர்வேதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், " உத்தரகண்ட் மாநிலத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு இமயமலைப் பகுதியில் இந்த தாவரம் கண்டறிப்படுவது இதுவே முதல்முறை.
புகழ்பெற்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள உத்தரகண்ட் வனத்துறையின் முதல் கண்டுபிடிப்பு இது என்பது பெருமைக்குரிய தருணம். உத்தரகண்ட் மாநிலத்தில் பூச்சி உண்ணும் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சியின்போது இந்த அரிய வகை தாவர இனம் கண்டறிப்பட்டுள்ளது. இந்த மாமிசத் தாவரம் பொதுவாக சிறுநீர்ப்பைகள் என்று அழைக்கப்படும் ஒரு வகையைச் சேர்ந்தது.
இலக்கை பிடிப்பதற்கு வளர்ந்த, அதிநவீன தாவர பாகத்தைத்தான் இது பொறியாக பயன்படுத்துகிறது. புரோட்டோசோவா, பூச்சிகள், கொசு மூட்டைகள், இளம் தட்டான்கள் ஆகியவை இதன் இலக்காக உள்ளன" என்றார்.
வனச்சரக அலுவலர் ஹரிஷ் நேகி, ஜூனியர் ஆராய்ச்சியாளர் மனோஜ் சிங் ஆகியோர் கொண்ட உத்தரகண்ட் வனத்துறை ஆராய்ச்சி குழு, இந்த கண்டுபிடிப்பு குறித்து புகழ்பெற்ற ஜப்பானிய தாவரவியல் இதழில் வெளியிட்டுள்ளது. வகைபிரித்தல் மற்றும் தாவரவியல் குறித்து 106 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆராய்ச்சி இதழ் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
இந்த தாவரம், வெற்றிடம் அல்லது எதிர்மறை அழுத்த பகுதியை உருவாக்கி இரையை பொறியியல் சிக்க வைக்கிறது. மாமிச தாவரங்கள் பெரும்பாலும் புதிய நீர் மற்றும் ஈரமான மண்ணில் காணப்படுகின்றன. சாதாரண தாவரங்களை ஒப்பிடுகையில், அறிவார்ந்த பொறி வழிமுறைகள் மூலம் முற்றிலும் வேறுபட்ட முறையைக் கொண்டு உணவு மற்றும் ஊட்டச்சத்தை அவை எடுத்து கொள்கின்றன.
பொதுவாக ஊட்டச் சத்து குறைந்த மண்ணில் வளரும் மாமிசத் தாவரங்கள், அவற்றின் மருத்துவப் பயன்கள் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள அறிவியல் சமூகத்தில் புதிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்