Tripura New CM: திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு..! பதவி விலகிய பிப்லப்குமார் தேப் வாழ்த்து..!
பிப்லப்குமார் தேப் ராஜினாமா செய்த நிலையில், திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் முக்கியமானது திரிபுரா. இந்த மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த மாநிலத்தின் முதல்வர் பிப்லப்குமார் தேப் தனது பதவியை இன்று மாலை திடீரென ராஜினாமா செய்தார்.
அவர் ராஜினாமா செய்த சில மணி நேரங்களில் அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக மாநிலங்களவை எம்.பி. மாணிக்சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரிபுரா மாநிலத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக் சஹாவிற்கு தற்போது 69 வயதாகிறது. இவர் அடிப்படையில் பல் மருத்துவர் ஆவார்.
திரிபுரா மருத்துவ கல்லூரியில் மாணிக் சஹா பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். அகர்தலாவில் உள்ள அம்பேத்கர் மருத்துவ பயிற்சி மருத்துவமனையிலும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். திரிபுரா கிரிக்கெட் அசோசியேஷனிலும் பொறுப்பு வகித்தவர்.
திரிபுரா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது, பதவியை ராஜினாமா செய்துள்ள பிப்லப்குமார் தேவிற்கு மிகவும் நெருக்கமானவராக திகழ்ந்தார். தற்போது திரிபுராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சியை வகித்து வந்த மார்க்சிஸ்ட் கட்சியை ஆட்சியில் இருந்து கீழே இறக்கிய பா.ஜ.க.வின் முதல்வராக பிப்லப்குமார் யாதவ் 2018ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் சமீபகாலமாக தனி ஆளாக முடிவு எடுப்பதாக சக எம்.எல்.ஏ.க்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். தொடர் புகார்கள் அவர் மீது குவிந்த நிலையில், அவர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியை ராஜினாமா செய்த பிப்லப்குமார் புதிய முதல்வர் மாணிக் சஹாவிற்கு பா.ஜ.க. சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக்சஹாவிற்கு வாழ்த்து என்று கூறியுள்ளார். முதல்வர் பதவியில் வகிப்பவர்தான் ஆளுங்கட்சியின் சட்டமன்ற தலைவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : திரிபுராவை பாஜக வசம் திருப்பிய பிப்லப் குமார் தேப்: யார் இவர்?
மேலும் படிக்க : Biplab Kumar Deb Resignation : நேற்று அமித்ஷாவுடன் சந்திப்பு! இன்று திரிபுரா முதலமைச்சர் திடீர் ராஜினாமா...! காரணம் என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்