மேலும் அறிய

ஒரு தோட்டா கூட சுடாமல், முழு தேசத்தையே அழிக்க முடியும்- பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபர.!

Minister Rajnath Singh: ராணுவத்தில் AI தொழில்நுட்பம் பயன்படுத்துவது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ கல்லூரியில் பேசியுள்ளார்.

மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்த வேண்டும் என ராணுவ அதிகாரிகளிடம் பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இன்று (அக்டோபர் 19) புதுதில்லியில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 62-வது (NDC) பாடத்திட்டத்தின் கீழ் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது பேசுகையில்,  உலகளாவிய எதிர்கால அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு, சிறந்த வழிநடத்தும் திறன் கொண்ட சிந்தனையாளர்களாக செயல்படுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

புதுமையான தீர்வுகள் அவசியம்:

போர்முறையானது இன்று, பாரம்பரிய போர்க்களங்களை விஞ்சி பல கள சூழல்களைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதில் இணையதள தாக்குதல், தகவல் போர், போன்றவையும் வழக்கமான நடவடிக்கைகளைப் போலவே முக்கியமானது என அவர் கூறினார். இணையதள தாக்குதல்கள், தவறான தகவல் பிரச்சாரங்கள், பொருளாதார போர் ஆகியவை ஒரு தோட்டா கூட சுடப்படாமல் ஒரு முழு தேசத்தையும் பாதிப்புக்கு உட்படுத்தக்கூடியவை என்று அவர் குறிப்பிட்டார். சிக்கலான பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்து புதுமையான தீர்வுகளை உருவாக்கும் திறனை ராணுவத் அதிகாரிகள் கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறினார்.

ஒரு தோட்டா கூட சுடாமல், முழு தேசத்தையே அழிக்க முடியும்- பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபர.!

செயற்கை நுண்ணறிவு :

இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிவேக தொழில்நுட்ப முன்னேற்றங்கள், எதிர்காலத்திற்கு ஏற்ற ராணுவத்தை உருவாக்கும் மிக முக்கியமான சக்தி என்று  ராஜ்நாத் சிங் விவரித்தார். நமது அதிகாரிகள் இந்த தொழில்நுட்பங்களைப் புரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
ராணுவ நடவடிக்கைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கிய தொழில்நுட்பங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆழமான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  போரின் சவால்களை சமாளிக்க, நவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் என்டிசி போன்ற பாதுகாப்பு கல்வி நிறுவனங்கள் ஆற்றி வரும் முக்கியப் பங்கை அவர் எடுத்துரைத்தார். 

சிறந்த ராணுவம்:

புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள், உலகளாவிய பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து உறுதியான புரிதலை அதிகாரிகள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஏனெனில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் போர்க்களத்திற்கு அப்பால், ராஜதந்திரம், பொருளாதாரம், சர்வதேச சட்டம் ஆகியவற்றில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் கொண்ட, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, சிறந்த ராணுவத்தை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை  ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget