Rajasthan: கொலைக்கான ஆதாரங்களை குரங்கு தூக்கிடுச்சு - கோர்ட்டில் போலீசார் சொன்ன ஷாக் நியூஸ்!
சஷிகாந்தின் கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதாரங்களை சமர்பிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால்...
கொலைக்கான ஆதாரங்கள் அனைத்தையும் பையோடு குரங்கு தூக்கிச் சென்றதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொலை,கொள்ளை என எந்த ஒரு குற்ற வழக்காக இருந்தாலும் உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். குறிபிட்ட வழக்கை போலீசார் விசாரித்து குற்றச்சம்பவத்துக்கான ஆதாரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள். ஒரு வழக்கில் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டுமென்றால் அது ஆதாரங்களில் அடிப்படையிலேயே நடக்கும். அந்த அளவுக்கு ஆதாரங்கள் முக்கியமானவை. அப்படியான ஆதராங்களை சர்வ சாதாரணமாக குரங்கிடம் கொடுத்துவிட்டு நீதிமன்றத்தில் கையை பிசைந்துள்ளனர் ராஜஸ்தான் போலீசார்.
நடந்தது என்ன?
ராஜஸ்தானைச் சேர்ந்த சஷிகாந்த் சர்மா என்ற இளைஞர் காணாமல் போயுள்ளார். இது குறித்து போலீசாருக்கு புகாரளிக்கப்பட்ட நிலையில், சஷிகாந்தை போலீசார் தேடியுள்ளனர். ஆனால் சடலமாகவே அவர் கிடைத்துள்ளார். கொலை வழக்கை பதிவு செய்த ராஜஸ்தான் போலீசார் சஷிகாந்தை கொன்றது யாரென தீவிரமாக விசாரணையை தொடங்கியுள்ளனர். தீவிர விசாரணையின் பலனாக 5 நாட்களுக்குள் கொலைக்குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். 5 பேரிடமும் தீவிர விசாரணையை மேற்கொண்ட போலீசார் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, மற்ற சில ஆதாரங்களையும் கைப்பற்றி ஒரே பையில் வைத்து போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள மரத்துக்கு அடியில் வைத்துள்ளனர். ஆதாரங்களை வைக்கும் அறையில் போதிய இடமில்லை என்பதால் அசால்டாக மரத்தடியில் வைத்துள்ளனர். தற்போது அதுதான் போலீசாருக்கு தலைவலியாகியுள்ளது.
நீதிபதி ஷாக்
சஷிகாந்தின் கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதாரங்களை சமர்பிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் வெறும் கையுடன் நீதிமன்றத்தில் நின்ற போலீசார், ஆதாரங்களை குரங்கு தூக்கிச் சென்றதாக தெரிவித்துள்ளார். பதிலைக் கேட்டு ஷாக்கான நீதிபதிகள், எழுத்துப்பூர்வமாக பதிலை தருமாறு தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசாரும் கைப்பட எழுதி விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி,'' கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தி உட்பட மற்ற ஆதாரங்கள் அடங்கிய பை மரத்தடியில் இருந்தது. அங்கு வந்த குரங்கு பையோடு தூக்கிச் சென்றுவிட்டது’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
போலீசாரின் இந்த கவனக்குறைவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஆதாரங்களை எப்படியும் திரும்பப்பெற வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்