"பாராட்டு தெரிவித்த சத்குருவுக்கு நன்றி"... ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட பஞ்சாப் முதலமைச்சர்!
தங்களுடைய ஊக்கம் அளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி சத்குருவுக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் நன்றி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில அரசின் திட்டத்தை பாராட்டியமைக்காக ஈஷா நிறுவனர் சத்குருவுக்கு அம்மாநில முதல்வர் திரு. பகவந்த் மான் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தங்களுடைய ஊக்கம் அளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி சத்குரு. எங்களுடைய அரசு, பஞ்சாப்பின் நீர் வளத்தை பாதுகாக்கவும், விவசாயிகளுக்கு உதவவும், நிலையான விவசாய முறைகளை ஊக்குவிப்பதற்கு தேவையான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுள்ளது.
இந்த திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சென்று, இதை ஒரு மாபெரும் இயக்கமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
Thank you for your words of encouragement @SadhguruJV ji.
— Bhagwant Mann (@BhagwantMann) May 5, 2022
Our govt is leaving no stone unturned to promote sustainable farming practices to help farmers and save waters of Punjab.
We have planned to reach out to all farmers with this scheme to turn it into a mass movement. https://t.co/LgPI6GEPC5
முன்னதாக, நிலத்தடி நீரை சேமிக்கும் விதமாக நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பிற்கு சத்குரு பாராட்டு தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ““நிலையான விவசாய முறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக, பஞ்சாப் அரசுக்கு பாராட்டுகள். பொருளாதாரம் & சுற்றுச்சூழலை அரவணைத்து நிலையான வேளாண் முறைகளை பின்பற்ற, அரசும் கொள்கைகளும் அதற்கு உறுதுணையாக இருப்பதே முன்னேற்றத்திற்கான வழி. பஞ்சாப், பாரதம் முழுவதையும் ஊக்குவிக்கட்டும்” என பதிவிட்டு இருந்தார்.
Congratulations, @PunjabGovtIndia, on incentivizing sustainable farming practices. The way forward is government & policy support for farmers to embrace economically & ecologically sustainable cultivation methods. May Punjab inspire rest of Bharat. -Sg @CMOPb @BhagwantMann https://t.co/gxTKzUqvVZ
— Sadhguru (@SadhguruJV) May 4, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்