ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானுக்கு பதிலடி! முதல் முறையாக வாய் திறந்த பிரதமர் மோடி
இந்தியா வரலாறு படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா வரலாறு படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி விண்வெளி மாநாட்டில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “விண்வெளித்துறையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. விண்வெளித்துறையில் இந்தியாவின் பயணம் மற்ற நாடுகளுடன் போட்டி போடுவதற்கு அல்ல. நாசாவோடு இணைந்து விண்வெளி நிலையத்தை அமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
வளரும் நாடுகளுக்கான விண்வெளி தொழில்நுட்ப உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. 2035ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்க உள்ளது.
விண்வெளி என்பது வெறும் இலக்கு மட்டுமல்ல. அது ஆர்வம், தைரியம் மற்றும் கூட்டு முன்னேற்றத்தின் பிரகடனம். இந்திய விண்வெளிப் பயணம் இந்த உணர்வைப் பிரதிபலிக்கிறது. 1963ல் ஒரு சிறிய ராக்கெட்டை ஏவியதிலிருந்து சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக மாறுவது வரை, எங்கள் பயணம் குறிப்பிடத்தக்கது.
எங்கள் ராக்கெட்டுகள் சுமைகளை விட அதிகமாக 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளை எடுத்துச் செல்கின்றன.” எனத் தெரிவித்தார்.
இதனிடையே பிரதமர் மோடியின் மே 13 முதல் 17ஆம் தேதி வரையிலான வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குரோஷியா, நார்வே, நெதர்லாந்து செல்லும் பிரதமர் மோடியின் பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்திய எல்லையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபரபாத்தி ஜெய்ஸ்-இ-முகமது அழிக்கப்பட்டது. இந்திய எல்லையில் இருந்து 20 கி.மீ தொலைவில் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டிலிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் முகாம் அழிக்கப்பட்டது.
அதேபோல் இந்திய எல்லையில் இருந்து 15 கி.மீ தொலைவில் பாகிஸ்தானில் உள்ள சாக் அம்ருவில் இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் முகாமும் அழிக்கப்பட்டது.
இந்திஅய் எல்லையில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள பஹவல்பூரில் இருந்த ஜெய்ஸ் – இ- முகமது முகாம் அழிக்கப்பட்டது. ஆபரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இதையடுத்து பஹல்காமில் இந்திய சுற்றுலாப்பயணிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.





















