Watch Video: வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த போலீஸ் அதிகாரி! உங்களுக்கு ஒரு சட்டமா சார்?
வந்தே பாரத் ரயிலில் போலீஸ் அதிகாரி ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Watch Video: வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த போலீஸ் அதிகாரி! உங்களுக்கு ஒரு சட்டமா சார்? Policeman travels in Vande Bharat without ticket, engages in verbal spat with TTE watch video Watch Video: வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த போலீஸ் அதிகாரி! உங்களுக்கு ஒரு சட்டமா சார்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/15/96ec5685644895e7839b4dcb44b6c5c91697376247005102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய அரசு ரயில்வே துறையில் பல்வேறு நவீன வசதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான் வந்தே பாரத் ரயில் ஆகும்.
அதிநவீன தொழில்நுட்பம், புதிய தோற்றம், அதிவேகம் என பல சிறப்பம்சங்களை கொண்ட வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை தருகிறது. பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த ரயிலின் கட்டணம் மற்ற ரயில்களை காட்டிலும் பன்மடங்கு அதிகம் ஆகும்.
டிக்கெட் இல்லாமல் பயணம்:
இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலில் போலீஸ் அதிகாரி ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் எங்கிருந்து எங்கு செல்லும் ரயில் என்று தெரியவில்லை. ஆனால்,. எஸ்.ஐ. அந்தஸ்தில் உள்ள போலீஸ் ஒருவர் அந்த ரயிலில் பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்துள்ளார்.
அவரிடம் டிக்கெட் பரிசோதகரான டி.டி.ஆர். பயணச்சீட்டை கேட்கிறார். ஆனால், அவர் தான் ஒரு காவல்துறை அதிகாரி என்று அவரிடம் கூறுகிறார். மேலும், அந்த காவல்துறை அதிகாரி டிக்கெட் பரிசோதகரை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். அப்போது, அதே ரயிலில் பயணிக்கும் மற்றொரு பயணி போலீஸ் அதிகாரியிடம் சரமாரியாக கேள்வி கேட்கிறார்.
Verbal Kalesh b/w TTE and Police Officer over Police Officer was Travelling without ticket pic.twitter.com/LhS4I56CzW
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 12, 2023
அதிகார துஷ்பிரயோகம்:
மேலும், டிக்கெட் பரிசோதகரிடம் அந்த போலீஸ் அதிகாரியை அடுத்து வரும் ரயில்வே நிலையத்தில் இறக்கிவிடுங்கள் என்றும் வலியுறுத்துகிறார். அதற்கு அந்த காவல்துறை அதிகாரி அவரையும் சமாதானம் செய்யும் முயற்சிக்கிறார். இதை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல்வேறு சிறப்பம்சங்களையும், சொகுசு வசதிகளையும் கொண்ட வந்தே பாரத் ரயிலில் பயணிக்க அனைவருக்கும் ஆர்வம் இருந்தாலும், அதன் கட்டணம் காரணமாக பெரும்பாலும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஒரு காவல்துறை அதிகாரி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ரயிலில் பயணிப்பது சாதாரண மக்கள் மத்தியில் ஆதங்கத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவை பகிர்ந்து மக்கள் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: 'அனுமனை' வைத்து பாஜகவுக்கு ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்.. சிவராஜ் சிங் சவுகானுக்கு செக்
மேலும் படிக்க: Navratri Festival: இன்று தொடங்குகிறது நவராத்திரி கொண்டாட்டம் - மதுரை மீனாட்சி அம்மன் - திருப்பதி கோயில் சிறப்பு பூஜைகள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)