சுதந்திர போராட்ட வீரரின் மகளின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி...
பசல கிருஷ்ண மூர்த்தியின் மகள் பசல கிருஷ்ண பாரதியை சந்தித்து மோடி ஆசீர்வாதம் வாங்கினார்.
![சுதந்திர போராட்ட வீரரின் மகளின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி... PM Touches Feet Of Freedom Fighter's Daughter, Seeks Blessing சுதந்திர போராட்ட வீரரின் மகளின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/04/e4609356b6bc95dc6d60f1bc2aea332e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆந்திராவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான மறைந்த பசல கிருஷ்ண மூர்த்தியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி திங்கள்கிழமை சந்தித்து பேசினார். பின்னர், பசல கிருஷ்ண மூர்த்தியின் மகள் பசல கிருஷ்ண பாரதியை சந்தித்து மோடி ஆசீர்வாதம் வாங்கினார்.
90 வயதான பாரதி, சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் காலில் விழுந்து மோடி ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது, பாரதியின் சகோதரி மற்றும் மருமகளையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகுடம் தாலுகாவில் உள்ள மேற்கு விப்பற்று கிராமத்தில் 1900ஆம் ஆண்டு பிறந்த பசல கிருஷ்ண மூர்த்தி 1921 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
காந்தியவாதியான இவருக்கு, உப்பு சத்தியாக்கிரக இயக்கத்தில் பங்கேற்றதால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 1978 இல் காலமானார்.
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அவரது 30 அடி உயர வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
அன்றைய தினமே, டிஜிட்டல் இந்தியா வாரம் 2022ஐ தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள காந்திநகருக்கு செல்ல உள்ளார்.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோடி பேசியவை தற்போது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. நாடு முழுவதுமிருந்து வந்திருந்த பாஜகவினர் மத்தியில் பேசிய மோடி, தெலங்கானா தலைநகரை பாக்யநகர் எனக் குறிப்பிட்டார்.
பாக்யநகரில்தான் சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேல் "ஏக் பாரத்" என்ற வார்த்தையை முதல்முதலாக பயன்படுத்தினார் என பிரதமர் மோடி கூறினார். இதுகுறித்து விளக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "ஹைதராபாத் தான் பாக்யாநகர்.இது நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் மோடி கூறினார். சர்தார் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு அடித்தளமிட்டார். இப்போது அதை மேலும் முன்னெடுத்துச் செல்வது பாஜகவின் பொறுப்பு" என்றார்.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் பல பாஜக தலைவர்கள் ஹைதராபாத்தின் பெயரை பாக்யநகர் என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)