மேலும் அறிய

Watch Video: மேடையில் ஒலித்த ஒடிசா மாநில வாழ்த்து பாடல்.. பாதியில் அமர்ந்த பிரதமர் மோடி.. விமர்சிக்கும் காங்கிரஸ்

முதல்வர் மோகன் சரண் மாஜி, பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா மாநில பாடல் ஒலித்துக்கொண்டிருந்தபோது பாதியில் அமர்ந்த வீடியோ கடும் விமர்சனங்களை கிளப்பி வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் 15வது முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த 52 வயதான மோகன் சரண் மாஜி நேற்று பதவியேற்றார். சரண் மாஜியுடன் துணை முதல்வர்களாக கனக்வர்தன் சிங்தேவ் மற்றும் பிரபாவதி பரிதா ஆகியோரு பதவியேற்று கொண்டனர். 

இவர்களுடன் சுரேஷ் பூஜாரி, ரபிநாராயண் நாயக், நித்யானந்த் கோண்ட், கிருஷ்ண சந்திர பத்ரா, பிருத்விராஜ் ஹரிசந்தன், முகேஷ் மகாலிங்க, பிபூதி பூஷன் ஜெனா, கிருஷ்ண சந்திர மகாபத்ரா, கணேஷ் ராம் சிங் குந்தியா, சூர்யவன்ஷி சுராஜ், பிரதீப் பால்சமந்தா, கோகுல நந்த் மல்லிக் மற்றும் சம்பத் குமார் ஸ்வைன் ஆகிய 13 பேரும் அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். 

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், உத்தரபிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், அசாம், ஹரியானா, கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றனர். 

ஒடிசா மாநில வாழ்த்து பாடலை அவமதித்தாரா பிரதமர் மோடி? 

ஒடிசா மாநில முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்கும் விழா நடைபெற்று கொண்டிருந்தபோது, ஒடிசாவின் மாநில வாழ்த்து பாடலான “பந்தே உத்கலா ஜனனி” பாடி கொண்டிருந்தது. அப்போது அவ்வளவு நின்று கொண்டிருந்த பிரதமர் மோடி, பாடல் முடியும் முன்பே, பாதியில் திடீரென தனது இருக்கையில் அமர்ந்தார். அவரை தொடர்ந்து, ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றுள்ள மோகன் சரண் மாஜியும் அமர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை கிளப்பி வருகிறது. 

25 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பில் பிரதமர் மோடியும், ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜியும் நிற்பதையும், பின்னர் அமருவதையும் காணலாம் அப்போது தூரத்தில் இதை பார்த்த உள்துறை அமௌச்சர் அமித் ஷா நடந்து வந்து , ஒடிசா மாநில வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்குமாறு சொன்னார். அதன்பின், இருவரும் எழுந்து நின்றனர். 

இதைபார்த்த காங்கிரஸ் கட்சியை சார்ந்த பலரும் இந்த வீடியோ கிளப்பை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில், இது ஒடிசாவையும், ஒடிசா மக்களவையும் அவமதிக்கும் செயல் என்று சமூக வலைதளங்களில் தங்களது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget