PM Modi Exercise Video | ஜிம்மில் மாஸ் லிஃப்டிங்.. FIT INDIA மெசேஜ் கொடுக்கும் பிரதமர் மோடி.. வீடியோ உள்ளே..
உத்தரபிரதேசத்தில் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி உடற்பயிற்சி இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிரதமர் மோடி, மீரட்டில் அமைய உள்ள மேஜர் தயான்சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், அங்குள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றிற்கு பிரதமர் மோடி சென்றார்.
அங்குள்ள இயந்திரங்களை ஆய்வு செய்த பிரதமர் மோடி அங்குள்ள இயந்திரங்களை ஆய்வு செய்தார். பின்னர், அங்குள்ள புல்-அப் உடற்பயிற்சி இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்து பார்த்தார். அவரது உடற்பயிற்சி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் பிரதீப்சில் வகீலா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, ”வலிமையான இந்தியாவின் தூதுவன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி இயந்திரத்தை பரிசோதித்து பார்க்கிறார் என்றும் பதிவிட்டுள்ளார்.
The Ambassador of Fit India💪
— Pradipsinh Vaghela (@pradipsinhbjp) January 2, 2022
PM Shri @NarendraModi Ji using fitness equipment at the venue of Sports University. #खेलेगा_यूपी_बढ़ेगा_यूपी pic.twitter.com/bNUETCxDPj
இந்த வீடியோவை பா.ஜ.க. தொண்டர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். நாட்டிலே அதிக சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தின் வெற்றி இன்னும் இரண்டாண்டுகளில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தேசிய கட்சிகளும், அந்த மாநில கட்சிகளும் தீவிர பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், பா.ஜ.க.வை மீண்டும் அந்த மாநிலத்தில் ஆட்சியில் அமரவைப்பதற்காக பிரதமர் மோடியும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையிலே, இன்று ரூபாய் 700 கோடி மதிப்பிலான விளையாட்டு பல்கலைகழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த பல்கலைகழகத்தில் ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், கைப்பந்து மைதானம், கபடி மைதானம், டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், ஓட்ட அரங்கம், நீச்சல் குளம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது. இந்த பல்கலைகழகத்தில் 540 விளையாட்டு வீரர்களுக்கும், 540 விளையாட்டு வீராங்கனைகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்