மேலும் அறிய

பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள்... தட்டித்தூக்கிய காவல்துறை...நடந்தது என்ன?

டெல்லியை தொடர்ந்து குஜராத்தின் அகமதாபாத்தில் மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக ஆயிரக்கணக்கில் சுவரொட்டி ஓட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குஜராத்தில் அதிரடி நடவடிக்கை:

டெல்லியை தொடர்ந்து குஜராத்தின் அகமதாபாத்தில் மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில்  கடந்த மார்ச் 21ஆம் தேதி தொடங்கப்பட்ட அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 2,000 போஸ்டர்களை காவல்துறையினர் அகற்றினர். 

"மோடியை அகற்றுங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்" என்ற வாசகம் பெரும்பாலான சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில், "பொது சொத்தை களங்கம் செய்ததற்காக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டத்தின் படி, அச்சகத்தின் பெயர் சுவரொட்டியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த மீறல்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

இது போன்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 138 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில், மோடி எதிர்ப்பு சுவரொட்டி ஓட்டியதற்காககாக மட்டும் 36 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள்:

ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் 2,000 போஸ்டர்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. மத்திய டெல்லியில் உள்ள ஐபி எஸ்டேட் பகுதியில் வேனை மறித்து சோதனையிட்ட போது அந்த சுவரொட்டிகளை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த சுவரொட்டிகளை ஆம் ஆத்மி தலைமையகத்தில் வழங்க அறிவுறுத்தப்பட்டதாக ஓட்டுநர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி, போஸ்டர்களில் அப்படி என்ன ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளது. இது மோடி அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும் சாடியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த கைது செய்யப்பட்ட அச்சக உரிமையாளர்கள், "மோடியை அகற்றுங்கள், நாட்டை காப்பாற்றுங்கள் என வாசகம் இடம்பெற்ற சுவரொட்டியை அச்சிட கோரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வந்தன" என்றனர்.

இந்த விவகாரம், பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையெ வார்த்தை போர் உருவாக காரணமாக மாறியுள்ளது. சுவரொட்டிகளை ஒட்டும்போது ஆம் ஆத்மி சட்டத்தை பின்பற்றவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து டெல்லி பாஜகவின் செய்தித்தொடர்பாளர் ஹரிஷ் குரானா கூறுகையில், "போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்ல ஆம் ஆத்மிக்கு தைரியம் இல்லை. போஸ்டர் ஒட்டும்போது சட்டத்தை மீறி உள்ளனர்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget