’’சபாநாயகர் பின்னால் ஒளியும் பிரதமர் மோடி; முட்டாள்தனம், அப்பட்டமான பொய்’’- வெடித்த பிரியங்கா காந்தி
இது அப்பட்டமான பொய். பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் தவறு. அப்படி எந்தத் திட்டமும் இல்லை. சபாநாயகரை அவ்வாறு பேச வைத்திருக்கின்றனர் - பிரியங்கா காந்தி.

நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வத்ரா செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது, ’’பிரதமர் மோடி சபாநாயகரின் பின்னால் ஒளிந்திருக்கிறார்.
என்ன முட்டாள்தனம் இது?
நேற்று, 3 பெண் எம்.பி.க்கள் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன்னால் நின்றிருந்தனர். அதனால் என்ன? இந்தக் காரணத்தால் பிரதமருக்கு இன்று அவைக்கு வர தைரியம் இல்லையா? என்ன முட்டாள்தனம் இது. இந்த அரசுக்கு விவாதம் நடத்த விருப்பம் இல்லை என்பதால், எந்த விவாதமும் நடக்கவில்லை.
அப்பட்டமான பொய்
சபாநாயகரின் குற்றச்சாட்டு ஓர் அப்பட்டமான பொய். பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் தவறு. அப்படி எந்தத் திட்டமும் இல்லை. சபாநாயகரை அவ்வாறு பேச வைத்திருக்கின்றனர்’’ என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
Delhi | Congress MP Priyanka Gandhi Vadra says,"...The PM is hiding behind the Speaker. Yesterday, he did not have the guts to come to the House because three women were standing before the bench. What nonsense is this?..There is no discussion because the govt doesn't want… pic.twitter.com/WrRcMpm0ly
— ANI (@ANI) February 5, 2026
நடந்தது என்ன?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் குடியரசுத் தலைவர் தீர்மானத்துக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி இருந்தன.

இந்த நிலையில், பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டதாகவும் அதனால்தான் பிரதமர் மோடி பேசவில்லை என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். எனினும் அதனை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்






















