Central Govt on Waqf Board: அடுத்த அதிரடி.. சொத்துக்கள் மீதான வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்க மசோதா - மத்திய அரசு திட்டம்
Central Govt on Waqf Board: சொத்துக்கள் மீதான வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான, புதிய மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Central Govt on Waqf Board: வக்பு வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பான மசோதா, விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
”வக்பு வாரிய அதிகாரத்தை குறைக்க மசோதா”
எந்தவொரு நிலத்தையும் தனது சொந்தச் சொத்தாக அறிவிக்கக் கூடும் என்ற வக்பு வாரியங்களின் அதிகாரத்தை திருத்துவது உட்பட, வக்பு சட்டத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த மசோதா வக்பு சட்டத்தில் சுமார் 40 திருத்தங்களை முன்மொழிய வாய்ப்புள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய திருத்தங்கள் என்ன?
வக்பு வாரியத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளது. அதன்படி, வக்பு வாரியங்களை மறுசீரமைத்தல், அமைப்பை மாற்றுதல் மற்றும் வாரியம் வக்பு சொத்து என அறிவிக்கும் முன் நிலத்தை சரிபார்ப்பதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும். மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களின் அமைப்பை மாற்றவும், அதில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் வழிவகை செய்யும் வக்பு சட்டத்தின் பிரிவு 9 மற்றும் பிரிவு 14 ஐ அமல்படுத்தவும் திருத்த மசோதா முன்மொழிகிறது என கூறப்படுகிறது. ஜூன் 2023ம் ஆண்டு, தேசிய தலைநகரில் உள்ள 123 சொத்துக்கள் சட்டத்திற்குப் புறம்பாக, வக்பு வாரிய சொத்துக்களாக உரிமை கோரப்பட்டது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த சூழலில் தான், வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வக்பு வாரிய அமைப்பு சட்டங்களும், அதிகாரங்களும்:
வக்பு சட்டம், 1954 வக்பு நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும். அதாவது குறிப்பிட்ட சில சொத்துக்களை வைத்திருப்பது மற்றும் குறிப்பிட்ட பொதுநலன் வரம்புக்குட்பட்ட நன்மைக்காக அதைப் பாதுகாத்தல் மற்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்குப் புறம்பாக அதைப் பயன்படுத்துவதையோ அல்லது அகற்றுவதையோ தடை செய்தல் போன்ற காரணங்களுக்கான அமைப்பாக செயல்படுகிறது.
இந்த அதிகாரங்கள் காரணமாக, வக்பு வாரியங்கள் இப்போது இந்திய ஆயுதப் படை மற்றும் ரயில்வேக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நில உரிமையாளராக உள்ளது. அவர்களின் நிலத்தின் பங்கு 2009 இல் இருந்து இரட்டிப்பாகியுள்ளது. வக்பு சட்டம், 1995 இன் பிரிவு 40-ல் பொறிக்கப்பட்டுள்ள செயல்படுத்தும் விதிகள். வக்ஃபுக்குச் சொந்தமானது என்று நம்புவதற்குக் காரணங்களைக் கொண்ட சொத்தின் உரிமையைப் பெறுவதற்கும், அறிவிப்புகளை வெளியிடுவதற்கும் அல்லது விசாரணை நடத்துவதற்கு வாரியத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது. சுதந்திரமான விசாரணையை நடத்தி, சர்ச்சைக்குரிய சொத்தின் உரிமை குறித்து ஒரு முடிவுக்கு வர வாரியம் அனுமதிக்கப்படுகிறது.