Indian Women's Hockey Team: தேம்பி அழுத ஹாக்கி வீராங்கனைகள்; தேற்றிய பிரதமர் மோடி!
வெற்றியோ, தோல்வியோ இந்திய மகளிர் ஹாக்கி அணியின் போராட்ட குணத்திற்கு நாடெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.
41ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஒலிம்பிக் தொடரில்தான் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. அரையிறுதியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால், வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி பிரிட்டன் அணியை எதிர்த்து இன்று விளையாடியது. போட்டி முடிவில், 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணி வென்றது. இதனால், இந்தியாவுக்கு வென்கலப் பதக்கம் பறிபோனது. கடைசி வரை போராடிய இந்திய அணி, நான்காவது இடத்தில் நிறைவு செய்தது. வெற்றியோ, தோல்வியோ இந்திய மகளிர் ஹாக்கி அணியின் போராட்ட குணத்திற்கு நாடெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.
இந்நிலையில், மகளிர் ஹாக்கி அணியை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, அவர்களுக்கு அறுதல் தெரிவித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் அணி வீராங்கனைகளுடன் உரையாடும் வீடியோ இப்போது சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
#WATCH | Indian Women's hockey team breaks down during telephonic conversation with Prime Minister Narendra Modi. He appreciates them for their performance at #Tokyo2020 pic.twitter.com/n2eWP9Omzj
— ANI (@ANI) August 6, 2021
The exceptional performance of the Men’s and Women’s Hockey Team has captured the imagination of our entire nation. There is a renewed interest towards Hockey that is emerging across the length and breadth of India. This is a very positive sign for the coming times. pic.twitter.com/E7HT3Gd7h5
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
We narrowly missed a medal in Women’s Hockey but this team reflects the spirit of New India- where we give our best and scale new frontiers. More importantly, their success at #Tokyo2020 will motivate young daughters of India to take up Hockey and excel in it. Proud of this team.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021