Nirmala Sitharaman: பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்..!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார்
1.கலால் வரி பெட்ரோலுக்கு ( லிட்டர் ஒன்றுக்கு) 8 ரூபாயும், டீசல் ( லிட்டருக்கு) 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும்.
2.உர மானியத்திற்காக வழங்கப்பட்ட 1.10 கோடியுடன் கூடுதலாக 1.05 லட்சம் கோடி வழங்கப்படும். இந்த அறிவிப்பு இந்தாண்டு பட்ஜெட்டில் இடம் பெறும்.
3.பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் திட்டத்தின் சிலிண்டர் கேஸ் பெறும் பயனாளர்களுக்கு, தலா ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கபடும்.
4. இந்தியாவில் பிளாஸ்டிக் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் மற்றும் தொடர்புடைய உற்பத்தி பொருட்கள் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது.
5. எஃகு, இரும்பு உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். அதே சமயம் சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.