Budget: ஜன.31-ந் தேதி தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றததில் 2023-2024ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம், பல்வேறு இடையூறுகள் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் முன்னதாகவே நிறைவு பெற்றது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ட்விட்டரில் அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் ஜோஷி, "2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வழக்கான இடைவேளையுடன் 66 நாள்களுக்கு நடைபெறும் கூட்டத் தொடரில் 27 அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு மத்தியில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிக்கும் தீர்மானம், மத்திய பட்ஜெட் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 14ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை, கூட்டத்தொடருக்கு இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைவேளியின்போது துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மானியங்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்யும்.
அதுமட்டும் இன்றி, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகள் தொடர்பான அறிக்கைகளை உருவாக்கவும் உதவும்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் (எல்ஏசி) இந்திய மற்றும் சீன துருப்புக்கள் இடையே டிசம்பர் 9 அன்று நடந்த மோதல் குறித்து விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது பல இடையூறுகளுக்கு வழிவகுத்தது.
இதற்கிடையில், உக்ரைன் போருக்குப் பிறகான காலத்தில் உலகளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகமே பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது.
Budget Session, 2023 of Parliament will commence from 31 January and continue till 6 April with 27 sittings spread over 66 days with usual recess. Amid Amrit Kaal looking forward to discussions on Motion of Thanks on the President’s Address, Union Budget & other items. pic.twitter.com/IEFjW2EUv0
— Pralhad Joshi (@JoshiPralhad) January 13, 2023
இச்சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மேலும், 2023 இல் வரவிருக்கும் மந்தநிலை குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது.