Watch Video: மோடியின் காலில் விழுந்த பப்புவா நியூ கினியா பிரதமர்...! என்ன காரணம் தெரியுமா..?
PM Modi: பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரமர் ஜேம்ஸ் மராபே தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரமர் ஜேம்ஸ் மராபே தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோடி காலில் விழுந்த பிரதமர்:
விமான நிலையத்தில், அந்நாட்டு நடன கலைஞர்கள் பாரம்பரிய நடனமாடி மோடியை வரவேற்றனர். அப்போது, ஜேம்ஸ் மராபே, மோடியின் கால்களை தொட்டு வணங்கினார். அவரை மோடி கட்டித் தழுவி தனது நட்புணர்வை வெளிப்படுத்தினார். அமைச்சர்கள், அதிகாரிகள், விமான நிலையத்தின் வெளியே கூடியிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த பயணத்தின் மூலம் பப்புவா நியூ கினியாவிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, தங்கள் நாட்டிற்கு வருகை தரும் உலக தலைவர்களுக்கு பாரம்பரிய முறைபடி வரவேற்பது அளிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்படியான வரவேற்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதன் முறையாக அளிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Prime Minister of Papua New Guinea James Marape seeks blessings of Prime Minister Narendra Modi upon latter's arrival in Papua New Guinea. pic.twitter.com/gteYoE9QOm
— ANI (@ANI) May 21, 2023
பப்புவா நியூ கினியா பயணம்:
ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெறும் இந்திய பசிபிக் நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் (Forum for India- Pacific Islands Cooperation (FIPIC)) பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பப்புவா நியூ ஜீனியா பிரதமர் ஜேம்ஸ் மாராபேவுடன் இணைந்து இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். பருவநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி, திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சி, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்கள் கலந்தாலோசிக்க உள்ளனர்.
இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் கூட்டத்திற்கு பிறகு, பப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் ஜெனரல் பாப் டாடே, பிரதமர் ஜேம்ஸ் மாராபே மற்றும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.