JF-17 Aircraft : ”பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா” ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில், இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிட்டு பாகிஸ்தான் பக்கம் முகாமிட்டுள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆத்திரமைடந்த பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல்
பயங்கரவாதிகள் மீது நடத்திய தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாத பாகிஸ்தான், இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த முயன்றது. பஞ்சாப் மாநிலத்தை நோக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்தது இந்திய ராணுவம்.
பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு சுக்குநூறாக்கிய இந்தியா
இந்நிலையில், இந்தியாவை நோக்கி தாங்கள் அனுப்பிய ஏவுகணைகளையும் இந்திய ராணுவம் தடுத்த நிலையில், தங்களது இரண்டு போர் விமானங்களை ஆயுதங்களுடன் இந்தியாவின் ராணுவ படைதளம் நோக்கி அனுப்பியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தானின் JF-17 என்ற இரண்டு போர் விமானங்களையும் இந்திய விமானப்படையும், ராணுவமும் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது.
இதனை பாகிஸ்தானின் ராணுவ படை தளபதிகளில் ஒருவரான அகமது ஷரிப் சவுத்திரி உறுதிப்படுத்தியிருக்கிறார். தங்களது இரண்டு போர் விமானங்களும் பணிகளுக்கு இடையே இழந்துவிட்டோம் என்று அவர் கூறியிருக்கிறார்.
இனியாவது, மூடிக்கொண்டு பாகிஸ்தான் இருந்தால் அந்த நாடு தப்பிப் பிழைக்கும் என்றும் தேவையில்லாமல் வீரத்தை காட்டுவதாக நினைத்தால் ராணுவ தளவடாங்களும் வீரர்களும் ஏன் பொதுமக்களுமே பாகிஸ்தானின் வீராப்புக்கு பலியாக நேரிடும் என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)





















