மேலும் அறிய

padma awards 2026: மம்மூட்டிக்கு பத்ம பூஷன், ரோகித்துக்கு பத்மஸ்ரீ... பத்ம விருதுகள் வென்ற சாதனையாளர்கள் யார்? யார்?

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கவுர், நடிகர் மாதவன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

குடியரசு தினத்தை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, சமூக சேவகர் மய்யல் ஆனந்தனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் மம்மூட்டி, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரள மாநிலத்தின் மறைந்த முதலமைச்சர் அச்சுதானந்தன், மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கவுர், நடிகர் மாதவன், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

முன்னதாக, திருவாரூரைச் சேர்ந்த மிருதங்கக் வித்வானுகு பக்தவச்சலம், சேலத்தைச் சேர்ந்த ராஜஸ்பதி கலியப்ப கவுண்டருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியைச் சேர்ந்த ‘குறும்பா’ ஓவியர் ஆர்.கிருஷ்ணன், தஞ்சாவூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவ விஞ்ஞானி புண்ணியமூர்த்தி நடேசன் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓதுவார் திருத்தணி சுவாமிநாதனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பத்ம விருதுகள். இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதாக பத்ம விபூஷண், மூன்றாவது உயரிய விருதாக பத்ம பூஷண் விருதும், நான்காவது உயரிய விருதாக பத்ம ஸ்ரீ  விருதும் வழங்கப்படுகின்றன. பிரதமர் அமைக்கும் பத்ம விருதுகள் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்த விருதுகள் 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விருது 'தனித்துவமான பணியை'யை அங்கீகரிக்க முற்படுகிறது மற்றும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், பொது சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் புகழ்பெற்ற மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவைக்காக வழங்கப்படுகிறது.  இந்த விருதுக்கு இனம், வேலை, பதவி அல்லது பாலினம் என எந்த பாகுபாடின்றி அனைவரும் தகுதியானவர்கள்.  மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்,  பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை.

 

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget