மேலும் அறிய

100 dolphins found dead: 100 டால்பின்கள் உயிரிழப்பு - அமேசான் காடுகளில் கடுமையாக அதிகரிக்கும் வெப்பநிலை காரணமா?

100 dolphins found dead: பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் உள்ள டெஃபி (Tefe) ஏரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட டால்பின் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் உள்ள டெஃபி (Tefe) ஏரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட டால்பின்கள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த வாரத்தில் மட்டும்  டெஃபி ஏரிப் பகுதியில் சுமார் 100 டால்பின்கள் உயிரிழந்ததற்கு காரணம் அதிக வெப்பநிலையாக இருக்கலாம் The Mamirauá Institute என்ற ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக டால்பின்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளது. 

டால்பின்கள் உயிரிழந்த இடங்களில் வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் காடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீக காலங்களில் கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. மேலும், பெரும்பாலான பகுதிகள் நிலவும் கடும் வறட்சி டால்பின்கள் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கும் என்று காலநிலை பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டால்பின்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அசாதாரணமானது என்றும் அமேசான் காட்டைச் சுற்றுயுள்ள பகுதிகளில் வரலாறு காணாத அளவு வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

உலகின் மிகப்பெரிய நீர்வழிப்பாதையாக விளங்கும் அமேசான் காடுகளில் சமீக காலமாக வறட்சி அதிகரித்துள்ளது. இந்தப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பல்வேறு உயிரினங்களின் வாழ்வியல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அமேசான் பகுதிகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில், எஞ்சியிருக்கும் டால்பின்களை மீட்பதும் பாதுகாப்பதும் மிகவும் சவாலாது என்று சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அமேசானில் நிலவும் வறட்சி பொருளாதாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள 59 மாகாணங்கள் இயல்பை விட குறைவான நீர்மட்டத்தை அடைந்துள்ளளதாக தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரேசில் கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. அமேசான் நதி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நதியில் உள்ள உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.  எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

The Mamirauá Institute ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரே கோய்லோ (Andre Coelho) இது குறித்து கூறுகையில், டெஃபி ஏரியில் உள்ள மற்ற டால்பின்களை வேறு ஏரிக்கு மாற்றுவது சிறந்த முடிவாக இருக்காது. ஏனெனில், இங்குள்ள நீரில் எதாவது பிரச்சனையிருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அதோடு, எல்லா நீர்நிலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆராய வேண்டும். டால்பின்கள் உயிரிழப்பிற்கான காரணம் என்னவென்று இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை. இருப்பினும், அதிக வெப்பநிலை காரணமாக இருக்கலாம். இங்குள்ள டால்பின்கள் வேறு ஏரிகளுக்கும் மாற்றப்படும் திட்டம் உள்ளது. குளிர்ந்த நீர் உள்ள ஏரி கொஞ்சம் பாதுகாப்பானதாக இருக்கலாம். “ என்று தெரிவித்துள்ளார்.

அமேசான் காடுகள் பூமியின் நுரையீரலாக செயல்பட்டு வருகிறது. அதாவது 20% ஆக்ஸிஜன் வாயுவை வெளியிடுகிறது. இந்தச் சூழலில் கடும் வெப்பநிலை உயர்வு காரணமாக அங்கு ஏற்படும் காட்டுத் தீ,வறட்சி உள்ளிட்டவைகளால்,  அங்கு இருந்து வரும் ஆக்ஸிஜன் வாயுவின் அளவு குறையும் அபாயம் ஏற்படும். இதற்கு பருவநிலை மாற்றம் இதற்கு முதன்மையான காரணம் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

பெயிலில் வந்த போக்சோ கைதி..! மனைவி, 4 வயது & 18 மாத மகன்கள், 17 வயது சிறுமி, மூதாட்டி - 6 பேர் கொடூர கொலை
பெயிலில் வந்த போக்சோ கைதி..! மனைவி, 4 வயது & 18 மாத மகன்கள், 17 வயது சிறுமி, மூதாட்டி - 6 பேர் கொடூர கொலை
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Embed widget