மேலும் அறிய

Operation Sindoor: பாகிஸ்தானை திசை திருப்பி, ஸ்கெட்ச் போட்ட இந்தியா.. கதறும் பயங்கரவாதிகள்.. திட்டம் நிறைவேறியது எப்படி ?

operation sindoor plan : " இந்தியா பாகிஸ்தான் பயங்கரவாதிகளை திசை திருப்பி, சரியான நேரத்தில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது"

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் 22-ம் தேதி, தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக, உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பதிலடி கொடுத்த இந்தியா ?

இந்தநிலையில் இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகளுக்கு பதிலடி எப்போது கொடுக்கப்படும் என எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் இருந்து வந்தது. இன்று இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில், போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தல் கொடுத்திருந்தது.

இந்தநிலையில் இரவு இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக தீவிரவாதி முகாம்களை குறி வைத்து 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது. 

இந்திய அரசு தெரிவித்தது என்ன ?

இதுகுறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மொத்தம், ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில், கணக்கிடப்பட்டு, தீவிரமடையாமல் உள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது.

25 இந்தியர்களும் ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த இடங்கள்

கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஆப்ரேஷன் சிந்தூர் என்றால் என்ன ? 

தீவிரவாத தாக்குதலின் போது, ஆண்கள் மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டனர். இதனால் பெண்களின் புனிதமாக பார்க்கப்படும், குங்குமம் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே பெண்கள் நெற்றியில் வைக்கப்படும் குங்குமத்தின் பெயராக சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தை செயல்படுத்தியது எப்படி ?

மத்திய அரசு இன்று மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொள்ளும் படி, மாநில அரசர்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்திருந்தது. இதேபோன்று ராஜஸ்தானில் மிகப்பெரிய அளவில், போர் ஒத்திக்கு பயிற்சி நடைபெற உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இவையெல்லாம் முடித்துவிட்ட பிறகு, பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. 

குறிப்பாக, போர் ஒத்திகை முடிந்த பிறகு தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் நம்பும் வகையில் இந்தியாவின் நடவடிக்கைகள் இருந்து வந்தது. இந்தநிலையில்தான் ஏழாம் தேதி இரவிற்கு பிறகு தாக்குதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 24 மணி நேரம் முன்னதாகவே இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியுள்ளது. குறிப்பாக பயங்கரவாதிகள், காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரே இடத்தில் இல்லாமல் வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்துள்ளனர். இவற்றை இந்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. இறுதியாக சரியாக ஒன்பது இடங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் இந்திய தரைப்படை மற்றும் விமானப்படை இணைந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைப்பு செய்திகள்

கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget