மேலும் அறிய

தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: சபரிமலை ஐயப்ப பக்தர்கள், பயணிகள் கடும் பாதிப்பு!

தமிழ்நாட்டிலிருந்து கேரளா சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை பெர்மிட் இல்லை என்று கூறி சிறைபிடித்து, அவற்றில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிட்டனர்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்து சேவைகள்,  நேற்று நள்ளிரவிலிருந்து இரவு 8 மணி முதல் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: சபரிமலை ஐயப்ப பக்தர்கள், பயணிகள் கடும் பாதிப்பு!

கேரளப் போக்குவரத்துத் துறையின் திடீர் நடவடிக்கைகளைக் கண்டித்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்கள், கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக கேரளப் போக்குவரத்துத் துறையினர், தமிழ்நாட்டிலிருந்து கேரளா சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை பெர்மிட் இல்லை என்று கூறி சிறைபிடித்து, அவற்றில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிட்டனர்.

அதோடு, இந்தப் பேருந்துகளுக்கு 70 லட்சம் ரூபாய்க்கும் மேல் அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது. கேரள அரசின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கு இடையேயான நீண்டகால நல்லுறவையும், பொதுப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் கடுமையாகப் பாதிக்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். குறிப்பாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல பூஜைக்காகச் செல்லத் திட்டமிட்டிருந்த பக்தர்கள் மற்றும் வார இறுதி நாட்களை கேரளாவில் செலவிட திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: சபரிமலை ஐயப்ப பக்தர்கள், பயணிகள் கடும் பாதிப்பு!

கேரளப் போக்குவரத்துத் துறை ஆம்னி பேருந்துகள் “ஒப்பந்தப் பேருந்து” (Contract Carriage) விதிமுறைகளை மீறியதாகக் கூறி அபராதம் விதித்துள்ளது. அதாவது, ஆம்னி பேருந்துகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், வழியில் தனித்தனி பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்றும் கேரள அரசு வலியுறுத்துகிறது. ஆனால், ஆம்னி பேருந்துகள் தனித்தனி பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த விதிமுறை வேறுபாடுகளே தற்போது சர்ச்சைக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.கடந்த காலங்களில் தமிழகமும் கேரளப் பதிவு எண் கொண்ட பேருந்துகளுக்கு அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் உடனடியாகத் தமிழக அரசும், கேரள அரசும் தலையிட்டு, சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும், பாதிக்கப்பட்ட பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget