Omicron Cases India: இந்தியாவில் எகிறும் ஒமிக்ரான் பாதிப்பு: முதலிடத்தில் மஹாராஷ்டிரா!
உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 38 பேருக்கு ஒமிக்ரான் திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 38 பேருக்கு ஒமிக்ரான் திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் திரிபு முதல் முதலாக தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை உலக சுகாதார நிறுவனத்துக்கு நவம்பர் 24ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவியது. இது மிகவும் வீரியமிக்கது என்றும் அதிவிரைவில் பரவக்கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தென் ஆப்பிரிக்காக, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒமிக்ரான் இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ளது. முதன் முதலில் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டது. அதில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் எனவும் மற்றொருவர் பெங்களூரைச் சேர்ந்தவர் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து துபாய் வழியாக பெங்களூருக்கு கடந்த மாதம் வந்த 66 வயது மதிக்கத்தக்க தென்னாப்பிரிக்க நபரும் 46 வயது மதிக்கத்தக்க உள்ளூர் மருத்துவரும் வந்தனர். அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி ஒமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பே இருவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் மிதமான அறிகுறிகளே அவர்களிடம் தென்பட்டுள்ளது.
இதையடுத்து டிசம்பர் 4ஆம் தேதியான நேற்று மேலும் 2 பேருக்கு இந்தியாவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டது. குஜராத்தின் ஜாம்பஜார் நகரில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய 72 வயதுடைய ஒருவருக்கும் மும்பை தானே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி திரும்பிய நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமிக்ரான் உறுதியானது. அதையடுத்து இந்தியாவில் அடுத்தடுத்து ஓமிக்ரான் பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் ஏதோ ஒரு வகையில் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது
இதுவரை இந்தியாவில் 38 பேருக்கு ஒமிக்ரா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 9 பேருக்கும், குஜராத்தில் 3 பேருக்கும், கர்நாடகாவில் 3 பேருக்கும், டெல்லியில் 2 பேருக்கும் ஆந்திரபிரதேசத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்