மேலும் அறிய

Twin Tower noida : 3,700 கிலோ வெடிபொருட்கள் தயார்! இடிக்கவே ரூ20 கோடி செலவு - இன்று தகர்க்கப்படும் இரட்டை கோபுரம்

டெல்லி அருகே நொய்டாவில் விதி மீறி கட்டப்பட்ட சூப்பர் டெக்ஸ் என்ற இரட்டை கட்டடங்கள் இன்று வெடிவைத்து தகர்க்க இருக்கின்றனர்.

டெல்லி அருகே நொய்டாவில் விதி மீறி கட்டப்பட்ட சூப்பர் டெக்ஸ் என்ற இரட்டை கட்டடங்கள் இன்று வெடிவைத்து தகர்க்க இருக்கின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று மதியம் 2.30 மணிக்கு டெட்டனேட்டருடன் இணைத்து இரட்டை கட்டடம் தகர்க்கப்படுகிறது. 

விதிமீறி 32 மாடியுடன் 328அடி உயரத்தில் அபெக்ஸ் மற்றும் 31 மாடியுடன் 318 அடி உயரத்தில் சியான் கட்டடம் கட்டப்பட்டதால் இன்று இடிக்கப்படுகிறது.  இந்த இரண்டு கட்டடங்களையும் இடிக்க சுமார் 3, 700 கிலோ வெடிபொருட்கள் பொருத்தப்பட்டுள்ளது. கட்டடத்தின் தூண்களில் வெடிபொருட்கள் பொருத்தப்பட்டநிலையில் எடிஃபைஸ் பொறியியல் நிறுவனம் கட்டடத்தை இடிக்கிறது. 

கட்டட இடிப்பின் மூலம் குவியும் 55 ஆயிரம் டன் கட்டட இடிபாடுகளை அகற்ற சுமார் 3 மாதங்கள் ஆகும் என தெரிகிறது. கிட்டத்தட்ட 3000 லாரி கட்டட இடிபாடுகள் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

கட்டட இடிப்பின்போது சுமார் 3.கி.மீ தொலைவிற்கு மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்தை நிறுத்திவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 5000 குடியிருப்புவாசிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கட்டடம் இடிக்கப்பட்டதும் அதிக தூசி கிளம்பும் என்பதால் விமான போக்குவரத்தும் அந்த குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கட்டட இடிப்பு பணிகளுக்காக ரூ. 20 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில் 9 நொடிகளில் கட்டடங்கள் இடிந்து விழ இருக்கிறது. 

கட்டடத்தின் வழக்கு விவரம் : 

உத்தர பிரதேச மாநிலம், கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள  நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 40 மாடிகளை உடைய இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடங்களை ஆகஸ்ட் மாதம் 28க்குள்  இடித்து தரைமட்டமாக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது.

இங்கு, நொய்டாவில் உள்ள 'சூப்பர்டெக்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம்,  40 மாடிகளை உடைய, 'எமரால்டு கோர்ட்' என்ற  இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது.  இந்த கட்டிடத்தில் 915 வீடுகள், 21 கடைகள் கட்டப்பட்டன. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரட்டை கோபுர கட்டிடத்தினை இடிக்க உத்தரவிட்டது. 

அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சூப்பர்டெக் நிறுவனம். இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதிகளை மீறி கட்டப்பட்ட  இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்க தீர்ப்பு அளித்தது. இரட்டை கோபுர கட்டிடத்தினை வெடி வைத்து நொடியில் தரைமட்டமாக்கும் பணி, 'எடிபைஸ் இன்ஜினியரிங்' எனும்  தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.  இதனால், கடந்த மே மாதம் கட்டடங்கள் இடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் திட்டமிட்டபடி இடிக்க முடியவில்லை. இதன்  காரணமாக மூன்று மாதம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 28 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது. 

இதனை அடுத்து ஹரியானா மாநிலாத்தில் இருந்து 3,500 கிலோ வெடி மருந்து கொண்டுவரப்பட்டு இரட்டை கோபுர கட்டிடத்தில் 9,400 துளைகளில் நிரப்பப்பட்டு வெடிக்கச் செய்து இடிக்க திட்டமிடப்பட்டு, வெடி மருந்துகளை 15 நாட்களுக்குள் கட்டிடத்தில் நிரப்பி விட்டனர். 

இடிக்கப்படும் நேரம் : 

கட்டிடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் - எமரால்டு கோர்ட் மற்றும் ஏடிஎஸ் கிராமம் - (இன்று) ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 7 மணிக்குள் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குடியிருப்பாளர்கள், அதே நாளில் மாலை 4 மணிக்குப் பிறகுதான் வீடு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டிடம் இடிக்கும்போது இரு பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் அப்பகுதியில் அனுமதிக்கப்படாது. மீட்பு பணிகளின் போது, நொய்டா ஆணையம் அவர்களுக்கு பார்க்கிங் இடத்தை வழங்கும். இரட்டைக் கோபுரத்திற்கு அருகே உள்ள நொய்டா-கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலை, இடிக்கபோகும் தினம் அன்று பிற்பகல் 2:15 முதல் 2.45 வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்பட உள்ளது. 

தலைப்பு செய்திகள்

LPG Tanker Accident: கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
2026 ITR தாக்கல்: ஜூலை 31 & ஆகஸ்ட் 31 முக்கிய தேதிகள். ரீஃபண்ட் விரைவாக பெற என்ன செய்ய வேண்டும்?
2026 ITR தாக்கல்: ஜூலை 31 & ஆகஸ்ட் 31 முக்கிய தேதிகள். ரீஃபண்ட் விரைவாக பெற என்ன செய்ய வேண்டும்?
TN Bypolls: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
Maruti S Presso: நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
பெரம்பூர் மக்களுக்கு குட் நியூஸ்.! புகார் சொன்ன அடுத்த நிமிடமே தீர்வு- அசத்த போகும் சிஎம் விஜய்யின் புதிய செயலி
பெரம்பூர் மக்களுக்கு குட் நியூஸ்.! புகார் சொன்ன அடுத்த நிமிடமே தீர்வு- அசத்த போகும் சிஎம் விஜய்யின் புதிய செயலி
இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்? ஆமீர் கானின் 3 ஆவது திருமண அறிவிப்பால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்? ஆமீர் கானின் 3 ஆவது திருமண அறிவிப்பால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Embed widget