Agniveers : கடற்படையில் 3000 அக்னி வீரர்கள் : அக்னிபாத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது என்ன?
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மூன்று படைத் தலைவர்கள் இணைந்து 'அக்னிபத்' இராணுவத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
புதிய அக்னிபாத் திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் 3,000 'அக்னிவீரர்களை' கடற்படை சேர்க்கும் என மேற்கு கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மூன்று படைத் தலைவர்கள் இணைந்து 'அக்னிபத்' இராணுவத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் ”இந்தத் திட்டத்தின் கீழ் ஆயுதப் படைகளில் நான்கு ஆண்டு சேவையை நிறைவு செய்யும் 'அக்னிவீரர்கள்' துணை ராணுவப் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
Navy to recruit 3,000 'Agniveers' under new Agnipath scheme in first year: Western Naval Commander
— Press Trust of India (@PTI_News) June 15, 2022
அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “அக்னிபத் யோஜனா இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் வரவேற்கத்தக்க முடிவு. இந்த நிலையில், இன்று, (மத்திய ஆயுதக் காவல் படைகள்) Central armed police force - CAPF மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் பணியமர்த்துவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் நிறைவு செய்யும் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்துறை அமைச்சகம் (Ministry of home affairs) முடிவு செய்துள்ளது.
'अग्निपथ योजना': देश की सशस्त्र सेना के साथ जुड़कर बने भारत के अग्निवीर...#BharatKeAgniveer pic.twitter.com/1a5pKdXCAR
— Amit Shah (@AmitShah) June 14, 2022
இந்த நடவடிக்கையானது ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்கள், தேசத்தின் சேவை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் பங்களிக்க உதவும்.
"இந்த முடிவைப் பற்றிய விரிவான திட்டமிடல் ஏற்கனவே தொடங்கிவிட்டது," என்று உள்துறை அமைச்சர் மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.
பெண்கள் உட்பட ராணுவ வீரர்களை நான்காண்டுகளுக்கு மட்டுமே பணியமர்த்தும் ‘அக்னிபத்’ திட்டம் கடந்த செவ்வாய் அன்று அறிவிக்கப்பட்டது, மற்றொரு சுற்று ஸ்கீரினிங்கிற்குப் பிறகு அவர்களில் 25 சதவிகிதம் பேரை மேலும் 15 ஆண்டுகளுக்கு வழக்கமான கேடரில் தக்கவைத்துக்கொள்ளலாம். ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துதல் மற்றும் பிற துறைகளில் வேலைவாய்ப்பிற்காக திறமையான மற்றும் ஆற்றல்மிக்க பணியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு செய்பவர்கள் 'அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள் மற்றும் அவர்களின் சீருடையின் ஒரு பகுதியாக ஒரு தனித்துவமான சின்னத்தையும் அணிவார்கள். என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.