Watch Video: ரயிலின் ஏசி கோச்சில் எட்டிப் பார்த்த பாம்பு - அலறி அடித்து ஓடிய பொதுமக்கள் - இணையத்தில் வீடியோ வைரல்
Watch Video: மும்பையில் ரயிலின் ஏசி கோச்சில் பாம்பை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
Watch Video: மும்பையில் ரயிலின் ஏசி கோச்சில் பாம்பு இருந்தது, பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் பெட்டியில் பாம்பு:
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த, கரிப் ரத் விரைவு ரயிலின் மேல் பக்க பெர்த்தின் இரும்பு கம்பியைச் சுற்றி நீளமான பாம்பு ஒன்று சுருண்டு படுத்து இருந்தது. ஜி 17 பெட்டியில் இருந்த பயணி ஒருவர் பாம்பு சீறுவதைக் கண்டு சக பயணிகளை எச்சரித்தார். பயணிகள் அலறியதும் கம்பியில் சுற்றிக் கொண்டிருந்த பாம்பு, தனது தலையை நிட்டி சீரியுள்ளது. இதையடுத்து, முதற்கட்டமாக அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து, அந்த பம்பும் ரயிலில் இருந்து அகற்றப்பட்டது.
Snake in train! Snake in AC G17 coach of 12187 Jabalpur-Mumbai Garib Rath Express train. Passengers sent to another coach and G17 locked. pic.twitter.com/VYrtDNgIIY
— Rajendra B. Aklekar (@rajtoday) September 22, 2024
நெட்டிசன்கள் சாடல்:
பாம்பு ரயில் பெட்டியில் இருந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதனை பகிரிந்து நெட்டிசன்கள் கிண்டலாக பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, ஒரு பயனர், "OMG. கடவுளுக்கு நன்றி இது பகலில் வெளிவந்தது மற்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இல்லையெனில் என்ன ஆகி இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், "என்ன ஒரு விசித்திரமான சம்பவம்; இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர் எழுதுகையில், "இந்திய ரயில்வே மற்றும் அமைச்சரை மக்கள் விமர்சிக்கலாம், ஆனால் இந்த பாம்பு பயணிகளின் பொருட்களுடன் பயணித்ததில் ஆச்சரியமில்லை" என்று குறிப்பிட்டார். இதுபோன்ற அசம்பாஅவிதங்களை தடுக்க, ரயில்வேதுறை உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வலலியுறுத்தியுள்ளனர்.
Amity University Noida: Snake came out of AC ventilation during lecture
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 20, 2024
pic.twitter.com/k2at4v9jsc
ஏசி வழியாக உள்ளே வந்த பாம்பு:
இதேபோன்ற ஒரு சம்பவத்தில், நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழக வகுப்பறைக்குள் பாம்பு ஏர் கண்டிஷனர் மூலம் நுழைவது தொடர்பான மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பாம்பைக் கண்ட மாணவர்கள் பீதியடைந்து தப்பிக்க முயன்றனர், சிலர் பயந்து மேசைகளின் மீது ஏறினர். இந்த சம்பவம் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர், பாடம் எடுப்பத பாதியில் நிறுத்தினார். மாணவர்கள் அறையை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடத்திற்ஜ்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பாம்பு, வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டது.